இரண்டு வருடத்திற்கு பிறகு தனது திருமண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா.! வைரலாகும் புகைப்படம்

நடிகை ஸ்ரேயா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், இவர் ஒரு மாடல் அழகி, ஆரம்பத்தில் இவர் விளம்பரங்களில் நடித்து வந்தார் அதன்பின்பு தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தில் இரண்டாம்கட்ட கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார், விக்ரம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். பின்பு கருப்பு காமெடி நடிகருடன் இணைந்து குத்தாட்டம் போட்டதால் அதன் பிறகு இவருக்கு படவாய்ப்புகள் அமையவில்லை.

பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போயும் போயும் கருப்பு காமெடி நடிகருடன் குத்தாட்டம் போட்ட நடிகை கதாநாயகியாக நடிப்பதா என நிராகரித்து வந்தார்கள், அதனால் நடிகை ஸ்ரேயாவுக்கு பட வாய்ப்புகள் அமையவே இல்லை. பின்பு இவர் தெலுங்கு பக்கம் சென்றார், அங்கு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை அதனால் தனது காதலரான ஆண்ட்ரேய் கோஸ்ச்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

shriya
shriya

இவர்களின் திருமணம் 2018ஆம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி மும்பையில் நடைபெற்றது, இவர்கள் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள், மேலும் இது ஒரு காதல் திருமணம், தன்னுடைய 35 ஆவது வயதில் திருமணம் செய்துகொண்ட நடிகை ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகு தனது காதல் கணவருடன் வெளிநாட்டிலேயே செட்டில் ஆனார், அதனால் இவர் தொடர்ந்து சினிமாவை நடிப்பாரா மாட்டாரா என குழப்பத்தில் இருந்தார்கள்.

ஆனால் தற்போது தெலுங்கில் இரண்டு திரைப்படத்திலும் தமிழில் அரவிந்த்சாமி நடித்த வரும் நரகாசுரன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார், சமூகவளைதலத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா அடிக்கடி தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வருவார், இந்த நிலையில் தற்போது திருமணம் ஆகி 2 வருடங்கள் முடிவடைந்த நிலையில் தனது திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் சில மணி நேரத்திலேயே அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.

shriya
shriya

Leave a Comment