முன்னாள் கணவர் மற்றும் கொழுந்தனாருக்கு நன்றி சொன்ன சோனியாஅகர்வால்.! எதற்காக தெரியுமா.?

0

செல்வராகவன் இயக்கத்தில் கஸ்தூரிராஜா தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் காதல் கொண்டேன் இந்த திரைப்படம் 2003ம் ஆண்டு வெளியாகியது. இதில் தனுஷ் சோனியா அகர்வால் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள், இந்த திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

காதல் கொண்டேன் திரைப்படம் வெளியாகி 17 வருடங்கள் ஆகிவிட்டது அதனால் தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் காதல் கொண்டேன் திரைப்படத்திலிருந்து பல நினைவுகளை பதிவிட்டு மகிழ்ந்தார்கள், அதேபோல் நடிகை சோனியா அகர்வாலும் கடவுள் வசீகரிக்கும் தமிழ்நாடு, செல்வராகவன் கஸ்தூரிராஜா அனைவருக்கும் நன்றி, அழகான பார்வையாளர்களுக்கு என்னை அறிமுகம் செய்து 17 வருடங்கள் ஆகின்றன நன்றி தனுஷ்..

எல்லா தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் நன்றி நான் பார்த்த தமிழ் சினிமாக்களில் ஒப்பிட முடியாத ஒரு திரைப்படம் என்றால் காதல் கொண்டேன் திரைப்படம்தான் எனக்கூறி காதல் கொண்டேன் திரைப்படத்திலிருந்து ஒரு போஸ்டர் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அதிக லைக்ஸ் போட்டு கமெண்ட்களை பறக்கவிட்டு வருகிறார்கள். இவர் ட்விட்டை ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள் ஆனால் தனுஷ் செல்வராகவன் ஆகியோர்கள் இதுவரை லைக் செய்யவில்லை, இயக்குனர் செல்வராகவன் காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் சோனியா அகர்வால் அவர்களை அறிமுகப்படுத்தினார் அதேபோல் 2006 ஆம் ஆண்டு அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார் சோனியா அகர்வால்.

அதன்பிறகு இருவரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.