பில்லா கெட்டப்பில் 17 வருடம் கழித்து என்ட்ரி கொடுத்த நயன்தாரா.. திரிஷாவிற்கு வைத்த செக்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா 17 வருடங்களுக்குப் பிறகு பில்லா கெட்டப்பில் என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில் அது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா.

தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார் அப்படி நடிகை நயன்தாராவும் திரிஷாவும் போட்டி போட்டுக் கொண்டு நடித்து வந்த நிலையில் திரிஷாவிற்கு மார்க்கெட் குறைந்தது அந்த நேரத்தில் நயன்தாரா தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்தார். அந்த நேரத்தில் திரிஷாவிற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.

தற்பொழுது நயன்தாராவிற்கு பட வாய்ப்புகள் குறைந்திருக்கும் நிலையில் திரிஷாவின் மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது. இவ்வாறு தற்பொழுது திரிஷாவின் மொத்த மார்க்கெட்டையும் காலி செய்யும் வகையில் நயன்தாரா மிகப் பெரிய ஆயுதம் ஒன்றை கையில் எடுத்துள்ளார். அதாவது நயன்தாரா அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் ஜவான் படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ப்ரிவ்யூ வெளியாகி சோசியல் மீடியாவை பட்டைய கிளப்பி வருகிறது.

nayanthara
nayanthara

இந்த படத்தில் ஷாருக்கான் உடன் ஜோடி சேர்ந்து நயன்தாரா நடித்துள்ளார் இதில் வரும் ஒரு சீன் 17 வருடத்திற்கு முன்பு பில்லா படத்தில் நயன்தாரா துப்பாக்கியை வைத்துக்கொண்டு செம ஸ்டைலாக வந்திருப்பார். அதை அப்படியே ஜவான் படத்திலும் கண்ணம் முன்னாடி காமித்துள்ளார்கள். இந்த சீனை பார்த்த ஒவ்வொரு ரசிகரும் அப்படியே மெய்சிலிர்த்து போயிருக்கும் என்றுதான் சொல்ல வேண்டும். இதன் காரணமாகத்தான் த்ரிஷாவின் மொத்த மார்க்கெட்டையும் நயன்தாரா காலி பண்ற வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment