10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ராகவா லாரன்சை புரட்டி எடுக்கபோகும் பிரபல நடிகர்.!

Raghava Lawrence
Raghava Lawrence

டான்ஸ் மாஸ்டராகவும், ஹீரோவாகவும் நடித்து தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ் இவருடைய நடிப்பில் தற்பொழுது சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக முதல் பாகத்தில் ஜோதிகா நடித்த சந்திரமுகி கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது அதாவது சந்திரமுகி திரைப்படத்தில் நடித்த முடித்தவுடன் அடுத்ததாக ருத்ரன் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் சரத்குமார், ப்ரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்கியா ராஜ், காளி வெங்கட், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் காஞ்சனா படம் வெளியாகி 10 வருடங்களுக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் உடன் சரத்குமார் இணைந்து நடிக்கள்ளார்.

அதாவது ருத்ரன் திரைப்படத்தில் வில்லனாக சரத்குமார் நடித்து வரும் நிலையில் இந்த படத்தினை கதிரேசன் இயக்குகிறார் மேலும் இந்த இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் சென்னை அருகே வண்டலூரில் சுமார் ரூ.300 கோடி செலவில் கால பைரவர் கோவிலில் பிரம்மாண்டமான அரங்கில் ராகவா லாரன்ஸ் சரத்குமார் இடையே நடக்கும் சண்டை காட்சிகள் சுமார் 15 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது.

எனவே இவர்களுக்கிடையே நடந்த சண்டை காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்திருப்பதாகவும் இந்த சண்டை அனைத்து தரப்பினரையும் கவரும் எனவும் கதிரேசன் தெரிவித்தார். ஆக்சன் கலந்த படமாக தயாராகி வரும் நிலையில் தீமையை நன்மை எப்படி வெல்கிறது என்பதுதான் இந்த படத்தின் கரு என்றார். மேலும் இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் கே.பி திருமாறன் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார்.