அன்று விஜய் கொடுத்த அட்வைஸ்.. இப்பொழுது நான் நடிகனாக இருக்கிறேன் – அருண் விஜய் பேட்டி.!

சினிமா உலகில் வாரிசு நடிகர் நடிகைகள் பலரும் கால் தடம் பதித்து அசத்துகின்றனர் ஆனால் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் பலரும் போராடுகின்றனர். அந்த வகையில் நடிகர் அருண் விஜய் 1995 ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன்பின் அருண் விஜய் சரியான கதைகளை தேர்வு செய்யாமல் அவர் நடித்ததால் அந்த படங்கள் அனைத்தும் தோல்வி படங்களாக மாறின. ஒரு கட்டத்தில் பலரும் விஜயகுமாரின் மகனாக இருந்தாலும் திறமை இருந்தால் தான் அவரால் வர முடியும் என கிண்டலும் கேலியும் செய்தனர். மேலும் அவ்வளவுதான் அவரது மார்க்கெட் முடிந்தது என கருதினர் இருந்தாலும்..

அருண் விஜய் சினிமா உலகில் தொடர்ந்து ஒரு நடிகராக போராடினார் ஆனால் சரியான வாய்ப்புகளும் கிடைக்காமல் போயின..  ஒரு கட்டத்தில் நடிப்பதை விட நாம் தயாரிப்பாளர் பணியை தேர்ந்தெடுத்து விடலாம் என முடிவெடுத்து ஒரு கட்டத்தில் நடிகர் விஜய்யை அணுகி ஒரு படத்திற்காக கால் ஷீட் கேட்க போய் உள்ளார் ஆனால் தளபதி விஜய்யோ..

ஹீரோவாக நடித்து வரும் நீங்கள் ஏன் பட தயாரிப்பாளராக விஸ்வரூபம் எடுக்கறீர்கள் என்னைவிட நீங்கள் சண்டைக் காட்சிகளில் சூப்பராக பண்ணக்கூடியவர் உங்களுக்கு என்று ஒரு திறமை இருக்கிறது இதனால் நடிப்பை விட்டு விட வேண்டாம் சரியான நேரம் கிடைக்கும் என அருண் விஜய்க்கு அட்வைஸ் சொல்லி உள்ளார் விஜய்.

அதன் பிறகு அருண் விஜய் நடிப்பதை ஒரு முக்கிய பங்காக எடுத்துக்கொண்டு தனது நடிப்பில் அதிகம் கவனம் செலுத்தினார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரே வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார் இச்செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது தீயாய் பரவி வருகிறது.

Leave a Comment