ப்ளூ சட்டை மாறன் போன்று விமர்சனம் செய்பவர்களுக்கு தல அஜித் கொடுத்த அட்வைஸ்..! அட இப்படி சொல்லிட்டாரே..!

தமிழ் சினிமாவில் தல அஜித் கால் தடம் பதித்து சுமார் 30 வருடங்களுக்கு மேலாக ஆகிவிட்டது அந்த வகையில் பல்வேறு தோல்விகளையும் வெற்றியையும் சந்தித்து வந்த நமது நடிகர் தனக்கான ஒரு இடத்தை பிடித்தது மட்டும் இல்லாமல் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி விட்டார்.

என்னதான் இவர் பிரபலமாக இருந்தாலும் விஜய் ரசிகர்களுக்கு என்றுமே எதிரி தான் அந்த வகையில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் அடிக்கடி இணையத்தில் சண்டை போட்டுக் கொள்வது வழக்கம்தான் அந்த வகையில் தங்களுடைய சண்டைகள் ஒரு சில நேரத்தில் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகிய நிலையும் உண்டு.

இது ஒரு பக்கம் இருக்க ஒரு பக்கம் நடிகர் நடிகைகளை பற்றி தவறாக நெகட்டிவ் விமர்சனங்கள் ட்ரோல்கள் என நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது இதற்கு தல அஜித் என்ன பதில் கொடுத்துள்ளார் என்பதை தன்னுடன் பைக் ரிப்பில் உடன் சென்ற நபர் ஒருவர் என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதாவது அஜித் கூறியது என்னவென்றால் இவர்களை இவ்வாறு செய்யாதீர்கள் என்று நிறுத்த சொல்வது மாமிசம் விற்பவர்களிடம் விலங்குகளை கொள்ளாதீர்கள் என்று சொல்வது போன்று தான் ஏனெனில் அசைவம் சாப்பிடவர்கள் இங்கு அதிகப் பேர் இருக்கிறார்கள். அதேபோல ஒரு பொருளுக்கு மார்க்கெட் செய்வது நான் செய்யவில்லை என்றால் இன்னொருவர் நிச்சயம் அதை செய்யப் போகிறார் என்று பதில் கூறியுள்ளார்.

அதே போல நெகட்டிவ் விமர்சனங்கள் ட்ரோல்கள்  கிசுகிசுக்கள்  போன்றவற்றை ரசிப்பதற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அதனை பயன்படுத்தி வருமானம்  ஈட்டி இன்னொருவர் வாழ்வாதாரத்துக்கு பிரச்சனை வராமல் தன்னுடைய குடும்பத்தை நடத்த முடியும் என்றால் இதை ஏற்றுக் கொள்ளலாம் என தல அஜித் கூறியுள்ளார்.

Leave a Comment