தளபதி ரசிகர்கள் கூட இதை கவனித்திருக்க மாட்டார்கள்… விஜய் -யின் கடைசி 3 திரைப்படத்தில் ஒளிந்திருக்கும் விளம்பரத்தை பார்த்தீர்களா.!

vijay : தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் லியோ இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது அதுமட்டுமில்லாமல் வசூல் ரீதியாக பல கோடி வியாபாரம் ஆனது. மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார்.

இந்த  திரைப்படத்திற்கு samsung ஸ்பான்சர் என்பதால் அனைத்து கேரக்டர்களும் சாம்சங் மொபைல் போனை யூஸ் பண்ணுவது போல் காட்சிகள் இருக்கும் இதனை பல ரசிகர்கள் கவனத்திற்கு மாட்டார்கள்.

leo
leo

இதனைத் தொடர்ந்து விஜய்யின் வாரிசு திரைப்படத்திலும் இது போல் ஒரு விளம்பரம் காட்டப்பட்டிருக்கும் வாரிசு திரைப்படம் துணிவு திரைப்படத்துடன் மோதியது இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தில் நைட் டைமில் ஒரு சீன் வரும் அதாவது சண்டைக் காட்சி அந்த காட்சியின் பொழுது விஜய்க்கு பின்னால் பினோலெக்ஸ் பைப்ஸ் விளம்பரத்தை காட்டியிருப்பார்கள்.

 

varisu
varisu

அதனைத் தொடர்ந்து விஜயின் பீஸ்ட் திரைப்படத்திலும் இது போல் ஒரு விளம்பரம் காட்டப்பட்டிருக்கும் அதாவது பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு மாலில் ஹைஜாக் நடக்கும் அப்பொழுது அந்த மாலில் சில விளம்பரங்களை வைத்திருப்பார்கள் அப்படித்தான் கேஎஃப்சி விளம்பரங்கள் இடம் பெற்றிருக்கும் இன்னும் சில விளம்பரங்களும் இருக்கும்.

இப்படி விஜய் ரசிகர்களுக்கே தெரியாமல் விஜய் திரைப்படத்தில் இத்தனை விளம்பரங்கள் இருப்பது தற்பொழுது ரசிகர்கள் கண்டுபிடித்து அதனை சமூக வலைதளத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.