மெகா ஹிட்டான ஆடுகளம் திரைப்படத்தில் டாப்சிக்கு யார் குரல் கொடுத்தது தெரியுமா.?

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ஆடுகளம் இந்த திரைப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்த இரண்டாவது திரைப்படம் ஆகும்.

இந்தத் திரைப்படம் சில விருதுகளையும் தட்டிச் சென்றது, இந்த திரைப்படம் சேவல் சண்டையை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டிருந்தது, படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது, பொதுவாக தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி என்றாலே வெற்றி என கூறுகிறார்கள்.

அந்தவகையில் சமீபத்தில் வெளியாகிய வடசென்னை மற்றும் அசுரன் திரைப்படமும் வெற்றி பெற்றது, ஆடுகளம் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார், அதேபோல் நடிகை டாப்ஸி தமிழ் சினிமாவில் ஆடுகளம் படத்தின் மூலம் தான் முதன்முறையாக அறிமுகம் ஆனார்.

இந்த திரைப்படத்தில் டாப்சிக்கு குரல் கொடுத்தவர் நடிகை ஆண்ட்ரியா, இந்த தகவல் பல வருடங்களுக்கு பிறகு தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment