சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் திரைப்படம் என்றால் ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள் அதுமட்டுமில்லாமல் ஒருசில இயக்குனர் மற்றும் நடிகர்கள் இணைந்தால் அந்த திரைப்படம் தாறுமாறாக ஹிட்டடிக்கும் என்பது பொதுமக்களின் கருத்து.
அந்த வகையில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் திரைப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்கும் ஏனென்றால் இவர்கள் இணைந்து பணியாற்றி வெளியாகிய திரைப்படங்கள் அனைத்தும் மரண ஹிட் வரிசையில் இணைந்து விட்டது.

இவர்கள் இணைந்து பணியாற்றிய திரைப்படங்களான ஆடுகளம், பொல்லாதவன் வடசென்னை, அசுரன் ஆகிய திரைப்படங்கள் அனைத்துமே மாபெரும் ஹிட்டடித்தது. அதிலும் ஆடுகளம் திரைப்படத்தை சொல்லவே வேண்டாம். அந்த திரைப்படத்தில் வரும் பாடலை இன்னும் பல ரசிகர்கள் ரிங்டோனாக வைத்துள்ளார்கள் அந்த அளவு மிகவும் பிரபலமாக பேசப்பட்ட பாடல்.

இந்த ஆடுகளம் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக டாப்ஸி நடித்திருப்பார் ஆனால் முதலில் டாப்ஸி கதாபாத்திரத்தில் நடித்து வந்தது திரிஷா தானம் நான்கு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு பின்பு நழுவி சென்றுள்ளார் த்ரிஷா.

படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பாலிவுட் பட வாய்ப்பு கிடைத்ததால் ஆடுகளம் திரைப்படத்தில் இருந்து வெளியேறியுள்ளார் த்ரிஷா. அதன் பிறகு தான் திரிஷா கதாபாத்திரத்தில் டாப்சி கமிட்டானார். வழக்கம்போல திரிஷா அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையா ஆகிடுச்சு.
