அட்ஜஸ்ட்மென்ட் என்பது எனக்கு மட்டும் கிடையாது பல பெண்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை.! உண்மைகளை உடைத்த தேவி பிரியா..

devi-priya
devi-priya

90 காலக்கட்டத்தில் சின்னத்திரையில் ரசிகர்களின் ஃபேவரிட் நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை தேவி பிரியா இவர் சித்தி சீரியலில் கல்லூரி பெண்ணாக நடித்து அசத்தியிருந்தார் மேலும் இதனை அடுத்து ஏராளமான வில்லியாகவும், குடும்பத் தலைவியாகவும் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தால் அந்த வகையில் தற்பொழுது வரையிலும் 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ள நிலையில் பிறகு பல திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார்.

இதனை அடுத்து இவர் சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் விக்ரம் திரைப்படத்தில் இவருக்கு டப்பிங் கொடுப்பதற்கு என வாய்ப்பு கிடைத்த நிலையில் சிறிய காரணங்களினால் அதனைத் தவிர விட்டார் இந்நிலையில் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்று இருக்கு நடிகை தேவி பிரியா பேட்டி அளித்திருந்த நிலையில் அனைத்து கேள்விகளுக்கும் சகிக்காமல் பதிலளித்துள்ளார்.

அதில் முதலாவதாக சினிமாவில் தொடர்ந்து நடிக்காததற்கான காரணம் கேட்டனர் அதற்கு பதிலளித்த தேவிப்பிரியா நியாயமாக சொல்ல வேண்டும் என்றால் சினிமாவில் நடிப்பதற்கு படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது. இது இல்லை என்று நான் சொல்ல மாட்டேன் சினிமாவுல சிறிய வேடங்களில் நடிக்க வேண்டும் என்றால் கூட பலருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த படத்திற்கு ஆடிஷன் முடிந்தவுடன் அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஒன்று உள்ளே வருகிறது நடிகை ஒருவர் ஒரு படத்தின் நடித்துவிட்டு மேலும் படங்களில் நடிக்க வேண்டும் என்ற நேரத்தில் அவர்கள் இந்த மாதிரியான சூழ்நிலையில் மாட்டிக் கொள்கின்றனர் இது நடிகைகளுக்கு பரவலாக நடந்து வருகிறது. இந்த விஷயத்தை பொறுக்க முடியாமல் இருக்கும் நடிகைகள் திருமணம் செய்து கொண்ட குடும்பம் கூட்டு என்று செட்டிலாகி விடுகின்றனர்.

இல்லை என்றால் சினிமாவில் இருந்து இருந்த இடம் காணாமல் போய்விடுகிறார்கள் ஆனால் இது போன்ற பிரச்சனை எனக்கு வந்தது கிடையாது அப்படி யாராவது ஒருவர் இந்த நோக்கத்தோடு என்னை அணுகினால் நான் அந்த வாய்ப்பை உதறி தள்ளி விடுவேன் என கூறியுள்ளார். மேலும் வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி சின்னத்திரையாக இருந்தாலும் சரி நடிப்பு திறனை தாண்டி ஒவ்வொரு நடிகையும் இது போன்ற பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.

எங்களுக்கு விளம்பரங்களில் நடிப்பது ஒரு கனவாக இருந்தாலும் இந்த மாதிரியான விஷயங்கள் வருத்தத்தை ஏற்படுத்துகிறது நான் அந்த மாதிரியான வாய்ப்புகளை விரும்புபவள் கிடையாது இதன் காரணத்தினாலேயே எனக்கு பல வாய்ப்புகள் கிடைக்காமலேயே சென்று விட்டது நான் மட்டும் கிடையாது என்னை போன்ற பல நடிகைகள் இந்த காரணத்தினால் பல வாய்ப்புகளை இழந்து இருக்கின்றனர் என்று கூறியுள்ளார் இவ்வாறு தேவி பிரியா ஏராளமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.