ஜாடிக்கேத்த மூடியை செலக்ட் செய்த வெங்கட் பிரபு.! வெளியானது ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்.!

தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வரும் பிரபலங்களில் ஒருவர் தான் ஜி.வி. பிரகாஷ் இவர் பல திரைப்படங்களுக்கு தனது இசையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்து விட்டார் என்றே கூறலாம் மேலும் இவர் இசையமைப்பது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு ரசிகர்களும் நல்ல வரவேற்பு தந்தார்கள்.தற்பொழுதும் இவரது நடிப்பில் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது ஆம் ஏன்டா தலையில எண்ண வெக்கல,திட்டம் இரண்டு போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் கார்த்தி இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் தான் அடியே.

இந்த திரைப்படத்தில் வெங்கட் பிரபு,கௌரி,மிர்ச்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.பல மாதங்களாக இந்த திரைப்படத்தின் அப்டேட் வெளியிடுங்கள் என கேட்டு வந்த ரசிகர்களுக்கு தற்பொழுது படக்குழு இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

ஆம் வித்தியாசமாக இருந்தாலும் இதனை நடிகர் ஜெயம் ரவி தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.மேலும் இந்த மோஷன் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தின் கதை என்னவாக இருக்கும் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் ஜி.வி. பிரகாஷ் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.

என பல விதமான கேள்விகளை எழுப்பி வரும் நிலையில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் இன்னும் ஒரு சில திரைப்படங்கள் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது அந்த திரைப்படங்களையும் இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version