அதிதி சங்கரால் விஜய் டிவி பிரபலத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய துரோகம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

கார்த்திக் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது கொம்பன் திரைப்படத்திற்கு அடுத்ததாக முத்தையா,கார்த்திக் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தான் விருமன். அதாவது இயக்குனர் முத்தையா மற்றும் கார்த்திக் இரண்டாவது முறையாக இந்த திரைப்படத்தின் மூலம் இணைத்துள்ளார்கள்.

இத்திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உலகில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக இருப்பதால் தற்பொழுது படக்குழுவினர்கள் மலேசியாவிற்கு இந்த திரைப்படத்தின் பிரமோஷன் வேலைக்காக சென்று உள்ளார்கள்.

இத்திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும் கார்த்திக்கின் இந்த திரைப்படத்தினை இவருடைய அண்ணனும், நடிகருமான சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

எனவே இதன் மூலம் இந்த திரைப்படத்தினை பற்றி ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தெரியவந்துள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறவைத்துள்ளது. மேலும் இத்திரைப்படம் கிராமத்து கதையை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள நிலையில் இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து விருமன் படத்தில் இடம் பெற்றிக்கும் ஒரு சூப்பர் பாடலை பாடிய விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் பிரபலம் ராஜலட்சுமி பாடியுள்ளார்.

எனவே இந்த படத்தின் ரிலீஸ்க்காக மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த படத்தில் அவர் பாடிய பாடலை அப்படியே நீக்கிவிட்டு அதற்கு பதிலாக அதிதி சங்கர் பாட வைத்துள்ளனர் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அதிதி சங்கர் பாடிய பாடலை திரையில் வெளியிடவுள்ளனர்.

இவ்வாறு ராஜலக்ஷ்மி மிகவும் ஆர்வமாக காத்து வந்த நிலையில் தற்போது இவருக்கு பெரும் மாற்றம் நிலவியுள்ளது இதற்கு முன்பு காஷ்மிகா மந்தனா மற்றும் அல்லு அர்ஜுனன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் சாமி பாடலை பாடி இருந்தார் இந்த பாடல் சூப்பர் ஹிட் பெற்றது. மேலும் ராஜலட்சுமி பாடிவுள்ள பாடல் நீக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Leave a Comment