நடிகை அதிதி சங்கருக்கு உருவான ரசிகர் மன்றம் – திரையரங்கில் பிரம்மாண்ட வரவேற்பு.! இதோ புகைப்படம்.

சினிமா உலகில் எடுத்த உடனேயே ஹிட் படங்களை கொடுக்கலாம் ஆனால் அவருக்கு என ஒரு ரசிகர்கள் பட்டாளம் முதல் படத்திலேயே உருவாகுவது ரொம்ப கம்மி ஆனால் அந்த வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும் அந்த வகையில் அதிதி ஷங்கருக்கு அது அமைந்துள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர்.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான படம் விருமன் இந்த திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமாகியுள்ளார் அதிலும் முதல் படத்திலேயே ஒரு துணிச்சலான பெண்ணாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். விருமன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் கோலாகலமாக ரிலீஸ் ஆகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் உடன் கைகோர்த்து சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ்ராஜ்,  மனோஜ், சிங்கம் புலி, சூரி மற்றும் பல பிரபலங்கள் படத்தில் நடித்திருந்தனர். படத்தில் அனைவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்து இருந்தனர். படம் முழுக்க முழுக்க ஆக்சன் செண்டிமெண்ட் காமெடிகள் என அனைத்தும்..

நிறைந்திருந்ததால் மக்களுக்கும் ரொம்ப பிடித்துப் போக கூட்டம் கூட்டமாக இந்த திரைப்படத்தை பார்க்க வருகின்றனர் முதல் நாளே நல்ல வரவேற்பு கிடைத்ததால் பிரமாண்டமான ஒரு வசூலை அள்ளி இருக்கும் என பலரும் இப்பொழுது கூறி வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் விருமன் படத்தை கான முதல் நாள் படத்தின் ஹீரோயின் அதிதி ஷங்கர் ரோகிணி திரையரங்கில் வந்து பார்த்துள்ளார்.

அப்பொழுது ரசிகர்கள் அவருக்கு ஆள் உயரம் இருக்கும் மாலையை அணிவித்து அழகு பார்த்தனர். மேலும் அவருக்கு ரசிகர் மன்றம் ஒன்றையும் உருவாக்கி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அதிதி ஷங்கருக்கு ரசிகர்கள் மாலை அணிவித்த போது எடுக்கப்பட்ட அந்த அழகிய புகைப்படம் இதோ.

aditi-shankar
aditi-shankar

Leave a Comment