எல்லாமே 90-க்கு மெல் தான் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த அதிதி சங்கர்.!

தமிழ் திரைவுலகில் தற்பொழுது புதிய வரவாக சினிமாவிற்கு பல திறமைகளுடன் அறிமுகமாகி இருப்பவர் தான் அதிதி சங்கர் பிரபல இயக்குனர் சங்கரின் மகள் என்பதால் இவருக்கு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது மேலும் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு இயக்குனர் மகள் என்பதால் இவருக்கு முதல் படமே கார்த்திக் நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது இந்த திரைப்படத்தினை முத்தையா இயக்கி இருந்தார் மேலும் அதிதி சங்கர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் இத்திரைப்படம் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

அதிதி சங்கருடைய கலகலப்பான பேச்சு இவருடைய உற்சாகம் ஆடுவது ன்,பாடுவது என இருப்பதால் பலரையும் கவர்ந்துள்ளது.மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திறந்தாலே விருமன் படத்தில் இவர் பாடிய மதுரவீரன் பாடல் தான் முதலில் வந்து நிற்கிறது. அதோட மட்டுமல்லாமல் தொடர்ந்து ஏராளமான முன்னணி நட்சத்திரங்களும் இந்த பாடலுக்கு நடனம் ஆடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் விருமன் படத்திற்கு பிறகு தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற வருகிறார்.

மேலும் இவரைப் பற்றிய பல தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது அந்த வகையில் சமீபத்தில் இவர் நேர்காணலில் கலந்து கொண்ட பொழுது தொகுப்பாளர் உங்களுடைய பத்தாம் வகுப்பு மதிப்பெண் என்ன என்று கேட்டதற்கு அறிவியல் பாடத்தில் 99, மதிப்பெண் கணித பாடத்தில் 97, மதிப்பெண் பிரெஞ்சு பாடத்தில் 97, மதிப்பெண்கள் சமூக அறிவியலில் 91, மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 91, மதிப்பெண்கள் என கூறியுள்ளார்.

மேலும் தற்பொழுது மருத்துவர் படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு சினிமா பக்கம் வந்துள்ளார் இவருக்கு சின்ன வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் ஆனால் படித்து முடித்துவிட்டு அப்பாவிடம் கேட்கலாம் எனவும் இருந்ததாக கூறி உள்ளார்.

Leave a Comment