சிம்பு தவிர்த்த படத்தில் ஹீரோவாகும் பிரபல நடிகர்.! ஹீரோயின் அதிதி சங்கர் தான்..

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் ஷங்கர் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் இவருடைய மகள் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த விரும்பன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாக இருக்கும் நிலையில் இவருடைய முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை தந்தது.

இதனை தொடர்ந்து தற்பொழுது இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் மேலும் இதனை அடுத்து அடுத்த அடுத்த பிரபல இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் இதுவரையிலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவராமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகர் ஒப்பந்தமாகி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த படம் தான் கொரோனா குமாரு. இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கப் போகிறார் என்ற தகவல்கள் வெளியான நிலையில் பிறகு திடீரென சிம்பு இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் சிம்பு நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கப் போகிறார் எனவும் இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் அதிதி சங்கரை நடிக்க வைக்கலாம் என இயக்குனர் கோகுல் முடிவெடுத்து உள்ளாராம். எனவே விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான நிலையில் இந்த படத்தினை அடுத்து லவ் டுடே திரைப்படத்தை இயக்கிய நடித்து இருந்தார் இந்த படம் பல கோடி வசூல் செய்து தயாரிப்பாளருக்கு பல கோடி லாபத்தை தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment