முன்னணி நடிகைகள் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு வளர்ந்த அதிதி சங்கர்..! இதற்கெல்லாம் அஜித் பட இயக்குனர் தான் காரணம்..!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று போற்றப்படுபவர் தான் இயக்குனர் சங்கர் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனரின் மகள் தற்பொழுது சினிமாவில் கலம்மிரங்கியுள்ளார் அந்த வகையில் இவர் கார்த்திக் நடிப்பில் வெளியான விருமன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலாக சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித் பட இயக்குனரின் திரைப்படத்தில் நடிகை அதிதி சங்கர் கமிட் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அவர் வேறு யாரும் கிடையாது தல அஜித் நடிப்பில் வெளியான பில்லா மற்றும் ஆரம்பம் போன்ற அஜித்திற்கு பிரம்மாண்டமான திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் விஷ்ணுவர்தனின் அடுத்த திரைப்படத்தில் தான் நடிகை ஆதிதி சங்கர் அவர்கள் நாயகியாக நடிக்க உள்ளார்.

ஆனால் இந்த திரைப்படம் குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் இன்னும் வெளி ஆகவில்லை. ஆனாலும் இவை உறுதியாகவதற்கு அதிக அளவு வாய்ப்பு உள்ளது என பலரும் கூறி வருகிறார்கள் ஏனெனில் கார்த்திக் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் நடிகர் அதிதி சங்கர் நடிப்பை பார்த்து பலரும் போற்றி உள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் நமது நடிகை ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் உருவாகியது மட்டும் இல்லாமல் இவருடைய நடனத்திற்கு பல ரசிகர்களும் தங்களை அர்ப்பணித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அவருக்கு பல்வேறு பெரிய நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த வண்ணம் இருப்பது மட்டுமில்லாமல் இவை கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் அதிதி சங்கர் இதுவரை ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் தான் கதாநாயகியாக நடித்து திரைப்படம் வெளியாகி உள்ளது அந்த வகையில் அதற்குள் முன்னணி நடிகையாக ஆகும் அளவிற்கு வளர்ந்து விட்டார் என பல முன்னணி நடிகர்களும் இவரைப் பார்த்து பொறாமைப் பட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment