குத்துன்னா இப்படி குத்தணும் சாண்டியுடன் அதிதி சங்கர் போட்ட ஆட்டம்.! வைரலாகும் வீடியோ.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அன்போடு அழைக்கப்படுபவர் சங்கர் இவர் இயக்கத்தில் தற்பொழுது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடைய அதிகரித்துள்ளது.இந்த நிலையில் சங்கரின் இளைய மகள் அதிதி சங்கர் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.

அவர் நடிப்பில் வெளியாகிய விருமன் திரைப்படத்தில் அதிதி சங்கர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களுடைய மிகவும் பிரபலம் அடைந்து விட்டார். விருமன் திரைப்படத்தில் தேன்மொழி கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இந்தத் திரைப்படத்தில் அதிதி சங்கர்  ஒரு கிராமத்து பெண் போல் நடித்திருந்தார் இவருக்கு இந்த கதாபாத்திரம் மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் திரைப்படத்திலும் அதிதி சங்கர் இணைந்துள்ளார். இவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டாலும் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார் அது மட்டும் இல்லாமல் முதல் திரைப்படத்திலேயே ஒரு பாடலையும் பாடி அசத்தி விட்டார். ஆனால் அந்த பாடல் ராஜலட்சுமி பாட வேண்டியது என சில சர்ச்சைகள் எழுந்தது.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அதிதி சங்கர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு  படபிடிப்பு தளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவை எடுத்துள்ளார் அந்த வீடியோவை சமீப காலமாக சமூக வலைதளத்தில் பதிவேற்றி வருகிறார் அந்த வகையில் சாண்டி மாஸ்டருடன் விருமன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்த பல ரசிகர்கள் அட அதிதி சங்கர் அருமையாக நடனமாடுகிறார் என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment

Exit mobile version