முழுசா நடிக்கணும்னு எல்லாம் ஆசை கிடையாது.! பிட்டு பிட்டு சீன்ல நடிச்சாலும் ஆழமா பதியனும் பிரபல நடிகையின் வெளிப்படை பேச்சு.

0

தமிழ் திரை உலகில் முதன் முதலாக காற்று வெளியிடை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. இவர் நடித்த முதல் திரைப்படம் சரியான வெற்றி இவருக்கு கொடுக்காவிட்டாலும் ரசிகர்களின் கிரஷாக மாறிவிட்டார்.

இதன் காரணமாக தற்போது அம்முனிக்கு ஒரு மாபெரும் ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டது. மேலும் இதை தொடர்ந்து செக்கச்சிவந்த வானம், சைக்கோ போன்ற பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார் பொதுவாக கதாநாயகியாக  நடிப்பதை விட குணச்சித்திர வேடங்களில் தான் அதிகம் நடித்துள்ளார்.

இது பற்றி செய்தியாளர்கள் நடிகை அதிதி ராவ் விடம் சில கேள்விகளை எழுப்பினார்கள் அதில் நீங்கள் கதாநாயகியாக நடிக்க ஆசைப்பட்டது இல்லையா என்று கேட்டுள்ளார்கள். அதற்கு பதிலளித்த நமது நடிகை எனக்கு படம் முழுவதும் நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது ஏதாவது ஒரு கெஸ்ட் ரோல் நடித்தாலே போதும் என அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தான் நடிக்கும் கதாபாத்திரம் ஒரு ரசிகர் மனதில் மிக ஆழமாக பதியும் படி இருக்க வேண்டும் என அவர் கூறியிருந்தார்.  மேலும் நீங்கள் ஹீரோயினாக நடிக்க விட்டால் உங்களுக்கு பட வாய்ப்புகளே கிடைக்காது என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த நமது அம்முனி எனக்கு ஹாலிவுட் நடிகைகள் தான் முன்னுதாரணம். ஏனெனில் ஹாலிவுட் நடிகைகள் எப்பொழுதும் கதாநாயகியாக நடிக்க ஆசைப்படுவது அல்லது நல்ல கதையாக இருக்கவண்டும் என எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள்.

ஏனெனில் அவர்களுக்கு கொடுக்கும் கதாபாத்திரத்தை மிக சிறப்பாக முடித்துக் கொடுத்து விட்டு சென்று விடுவார்கள். அது மட்டுமல்லாமல் அவரகளை பற்றிய விமர்சனங்கள் மற்றும் கிண்டல்கள் ஆகியவற்றை பற்றி கவலைப்பட மாட்டார்கள் ஏனெனில் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தால் மட்டுமே போதும் என்பதுதான் அவர்களுடைய எண்ணம்.

இப்படி நமது நடிகை கூறியதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள். அது மட்டுமல்லாமல் பல்வேறு ரசிகர்களும் எங்கள் மனது உங்களுக்காக மட்டுமே தான் நீங்கவே குடியிருக்கலாம் என மனம் திறந்து பேசி வருகிறார்கள்.