தமிழ்சினிமாவில் புதிதாக வரும் நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்து காணாமல் போய்விடுவார்கள், ஆனால் சில நடிகைகள் ஒரே படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து விடுவார்கள். அந்த வகையில் ஒரே ஒரு படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் அதிதி பாலன்.
இவர் நடித்த அருவி திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர், அருவி திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவராலும் ரசிக்கப்பட்டது, இவர் எப்பொழுதும் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் ஹோம்லியாக தான் செல்வார்.

அருவி திரைப்படத்திற்கு பிறகு பல இயக்குனர்கள் இவரிடம் கதை சொல்ல அணுகியுள்ளார்கள் ஆனால் அதிதி பாலன் சரியான கதை இல்லை என்று நிராகரித்துள்ளார், இந்த நிலையில் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்த வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் அதிதி பாலன் மஞ்சள் நிறப் புடவையில் கவர்ச்சி காட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

