அதிதியுடன் மல்லுக்கட்டி தோத்துப்போன கார்த்தி..! இந்த விளையாட்டும் நல்லா தான் இருக்கு…

0
karthi
karthi

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர் கார்த்திக் நடித்த முதல் திரைப்படமான பருத்திவீரன் திரைப்படம் ரசிகன் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

மேலும் நடிகர் கார்த்தியை மணிரத்தினம் அவர்கள் பருத்திவீரனுக்கு முன்பாகவே தனது திரைப்படத்தில் நடிக்க கேட்டுள்ளார் அதற்கு கார்த்தி அவர்கள் எனக்கு தற்போது சினிமா மீது ஆர்வம் இல்லை என்று கூறியுள்ளார்.

அதன் பிறகு பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்த கார்த்தி அடுத்தடுத்த படத்தில் நடித்து வெற்றிக்கொடியை நிலநாடி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் முத்தையா இயக்கத்தில் வெளியான விருமன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

விருமன் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது இந்த படத்தில் நடித்த அனைத்து பிரபலங்களும் ஒரு விளையாட்டை விளையாடினார்கள் அப்போது அதிதி சங்கரும் கார்த்திக்கும் எதிரெதிர் அணியில் இருந்தனர். அப்போது இவர்கள் இருவரும் மோதும் போது அதிதி சங்கரிடம் கார்த்தி மல்லு கட்ட முடியாமல் தோற்று விடுகிறார்.

இது போன்று விருமன் படத்தில் நடித்த அனைத்து பிரபலங்களும் அந்த போட்டியில் பங்கேற்றனர். இதை சுற்றியுள்ள  பல ரசிகர்கள் கைதட்டி கொண்டாடினர். அதுமட்டுமல்லாமல் அந்த போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு பிரபலங்களுக்கும் கைத்தட்டி அவர்களை உற்சாகப்படுத்தினர்.

விருமன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கார்த்தி நடிப்பில் வெளியாகஉள்ள சர்தார் திரைப்படம் திபாவளி அன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியானது. பின்னர் நடிகர் கார்த்தி முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் உடன் இணைய உள்ளதாக கூறபடுகிறது.

கார்த்தி மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவான கைதி திரைப்படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து மீண்டும் இவர்கள் இருவரும் இணைய உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இதோ அந்த வீடியோ.