அகிலத்தில் உள்ள அனைத்தும் இருந்தும்.. நீ அசுரன் தான்.! மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பிரபாஸின் ஆதிபுரூஸ் ட்ரெய்லர்.!

0
adipurush
adipurush

பிரபாஸ் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் இந்திய அளவில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது அந்த வகையில் பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படத்திற்கு பிறகு சஹோ, ராதே சியாம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் பிரபாஸ் அதேபோல் பிரபாஸ் நடிக்கும் திரைப்படங்கள் ஹிந்தியிலும் வெளியாகி கொண்டிருந்தன.

அப்படி இருக்கும் நிலையில் தன்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதி புரூஸ் என்ற திரைப்படம் 3டி இல் உருவாகியுள்ளது அதேபோல் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சைப் அலிகான் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார் பிரபாஸ்.

ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது அதேபோல் ஆதி புரூஸ் திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி 2023 இல் வெளியாக இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் 2022 ல் வெளியாகிய  ஆதி புருஷ் டீசர் ரசிகர்களால் கடும் விமர்சனத்திற்கு ஆளானது அதனால் கிராபிக்ஸ் ஸ்பெஷல் எஃபெக்ட் என அனைத்தையும் விமர்சனம் செய்தார்கள் ரசிகர்கள்.

அதனால் ஆதி புரூஸ் திரைப்படத்தின் சில காட்சிகளை மீண்டும் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு கிராபிக்ஸ் செய்யப்பட்டதை தொடர்ந்து 2023 ஜூன் 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலரை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது.