கபடி பிளேயராக மீண்டும் நடிக்கப்போக்கும் அதர்வா.! இந்த ஆட்டம் வேற லெவல் இருக்கும் போல இயக்குனரை நம்பி களத்தில் குதிக்க ரெடி.

திரை உலகில் சமீப காலமாக விளையாட்டுகளை மையப்படுத்தி பல திரைப்படங்கள் வெளிவந்து வசூல் வேட்டை நடத்தி உள்ளன.

அதிலும் முன்னணி நடிகர்களே இது போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதால் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

கபடியை மையமாக வைத்து கில்லி, வெண்ணிலா கபடி குழு போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது அதர்வா குருதி ஆட்டம் என்ற பெயரில் கபடி பிளேயர் ஆக நடித்து உள்ளார்.

இதை தொடர்ந்து மீண்டும் கபடியை மையமாக வைத்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இந்த திரைப்படத்தை சற்குணம் அவர்கள் இயக்கவுள்ளார் சற்குணம் இதற்கு முன்பாக அதர்வாவை  வைத்து சண்டிவீரன் என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார்.

மீண்டும் தற்போது இவர்கள் கூட்டணி இணைந்துள்ளது கபடியை மையப்படுத்தி வைத்திருக்கும் படத்தின் பெயர் பொத்தேரி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Atharvaa actor -tamil360newz
Atharvaa actor -tamil360newz

இந்த படம் நிச்சயம் அதர்வாவுக்கு ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் படம் முழுக்க முழுக்க அதிரடி திருப்பங்கள் மற்றும் டிஸ்டிக் நிறைய இருக்குமாம் இந்த திரைப்படம் அதர்வாவுக்கு நிச்சயம் ஒரு திருப்புமுனை படமாக அமையும் இந்த கூட்டணி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக உள்ளதாம்.

Leave a Comment