கர்ப்ப காலத்தில் வயிற்றில் மெஹந்தி போட்ட வெண்பா..! இணையத்தில் ஒரேடியாக குவியும் லைக்குகள்..!

bharathi-kannama-venba
bharathi-kannama-venba

தமிழ் திரைஉலகில் சின்திரையின் மூலமாக பிரபலமான நடிகைகள் ஏராளம் அந்தவகையில் நடிகை பரினாவும் ஒருவர் இவர் சீரியலில் நடிக்கும் பொழுது தன்னுடைய முழு திறமையையும்  நடிப்பின் மூலம் வெளிக் காட்டி ரசிகர்களை எளிதில் கவர்ந்து விட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சீரியலில் நடிப்பதற்கு முன்பாக மாடல் துறையில் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல் இதன் மூலமாக பல்வேறு வெற்றியையும் கண்டவர். அந்த வகையில் தற்போது இவருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்திலும் முக்கிய கதாபாத்திரம் என்றால் மட்டுமே நடிக்க துணிகிறார்.

அந்தவகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் நமது நடிகை வெண்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஏகத்திற்கு கவர்ந்து விட்டார். இதன் காரணமாக இந்த சீரியலை இளசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரும் விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

மேலும் இந்த சீரியலின் மூலம்தான் விஜய் டிவியின் டிஆர்பி எகிறி கிடக்கிறது. இதற்கு நமது நடிகை பரினா முக்கிய பங்கு வகிக்கிறார்.  பொதுவாக நடிகைகள் பிரபலமாக இருந்தாலே போதும் அவ்வப்போது இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வருவார்கள்.

அந்த வகையில் நமது நடிகை தான் கர்ப்பமாக இறக்கும்பொழுது தன் வயிற்றில் மெஹந்தி போட்டுக் கொண்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார்கள் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வெண்பாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.