ரயில் வண்டி புகை மாதிரி நடிகர்களுக்கு இணையாக குபு குபுன்னு சிகரெட் ஊதி தள்ளிய நடிகைகள்.! பட்ட ஜிலேபியா இருந்துகிட்டு இப்படி ராவா அடிக்கிறீங்களே…

Actresses who smoke on par with Rajini : சினிமாவில் பொதுவாக ஸ்டைலுக்காக தம் அடிப்பது சிகரெட் பிடிப்பது என சில காட்சிகளை வைப்பார்கள். ஆனால் சமீபகாலமாக சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் சிகரெட் ஸ்டைலாக பிடிப்பது ரஜினிகாந்த் என பெயரும் இருக்கிறது.

ரஜினி ஸ்டைலுக்கு இணையாக யாரும் சிகரெட் பிடிக்க முடியாது என ஒரு பேச்சும் அடிபட்டு வருகிறது. ஆனால் சமீப காலமாக நடிகர்களை தாண்டி நடிகைகளும் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் பல நடிகைகள் தற்போது சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடித்துள்ளார்கள். அவர்களில் நடிகை சமந்தா, திரிஷா, ஆண்ட்ரியா, அமலாபால், ராய் லட்சுமி, மும்தாஜ், சகிலா, ஹன்சிகா, யாஷிகா, ராகுல் ப்ரீத் சிங், ராய் லட்சுமி என பல நடிகைகள் சிகரெட் பிடித்து தள்ளியுள்ளார்கள்.

இதில் நடிகை நயன்தாராவும் சிகரெட்டை கையில் வைத்துக்கொண்டு பத்தடிக்காமல் நின்று கொண்டிருக்கும் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.

நடிகை நயன்தாரா பார்ட்டியில் புகை பிடிப்பது போல் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது அதனை தொடர்ந்து நடிகை ஹன்சிகா 2011 ஆம் ஆண்டு பப்பில் புகை பிடிப்பது போன்ற புகைப்படம் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படமும் சமூக வலைதளத்தில் வெளியானது.

அதேபோல் நடிகை திரிஷா பொதுவெளியில் சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆனது. அவரைத் தொடர்ந்து அமலாபால் கையில் சிகரெட் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டார் இவருக்கு மது அருந்தும் பழக்கமும் இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் நடிகை ஆண்ட்ரியா பற்றி நாம் கூறவே தேவை இல்லை ஏனென்றால் அதிகமாக புகைப்பிடிக்கும் பழக்கம் அவருக்கு இருந்திருக்கிறது ஆனால் சில காரணங்களால் அவர் புகைபிடிப்பதை படிப்படியாக குறைத்துக் கொண்டார் என கூறப்படுகிறது.