முரட்டு வில்லன்கலுக்கே டஃப் கொடுக்கும் வகையில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ஒரு கலக்கு கலக்கிய நடிகைகள்.! அதிலும் இந்த நடிகையை அடிச்சிக்க ஆளே இல்லை.

பொதுவாக பெண்கள் மென்மையானவர்கள் அழகானவர்கள் அவர்களின் பாசம், தியாகம் என அனைவரையும் இதுபோல்தான் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் பெண்களை பயன்படுத்தி வந்தார்கள் அதுமட்டுமில்லாமல் காதல் செய்யவும், ரொமான்ஸ், டூயட் பாடல்களுக்கு மட்டுமே பெண்களை பயன்படுத்தி வந்தார்கள்.

இந்தநிலையில் காலப்போக்கில் பெண்களுக்கும் வில்லத்தனம் வரும் என காட்டி பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர். அவரைத் தொடர்ந்து பல இயக்குனர்கள் பெண்களுக்கு வில்லி கதாபாத்திரம் கொடுத்து படத்தில் வெற்றி கண்டுள்ளார்கள். அப்படி சினிமாவில் அழகிய நடிகைகளாக இருக்கும் அவர்கள்  கொடூர வில்லியாக தமிழ் ரசிகர்களின் மனதில் அழுத்தமான இடம் பிடித்தது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.

ரம்யா கிருஷ்ணன்- வில்லி கதாபாத்திரம் என்றாலே நம் மனதில் உடனே தோன்றுவது ரம்யா கிருஷ்ணன்தான் ஏனென்றால் இவர் ரஜினியுடன் படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படையப்பா திரைப்படத்தில் ஸ்டைலிஷான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி ரஜினியே மிஞ்சும் அளவிற்கு பெயர் வாங்கியவர். அன்றிலிருந்து இன்றுவரை நீலாம்பரி என்றால் படையப்பா படம் அனைவருக்கும் ஞாபகம் வரும்.

ramya kirshnan

சகுந்தலா- நீலாம்பரி அடுத்ததாக தமிழ் சினிமாவில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் ஆழமாகப் அறிந்தவர் சகுந்தலா. இவர் விக்ரம் நடிப்பில் வெளியாகிய தூள் திரைப்படத்தில் லோக்கல் பெண்ணாக தாதா கெட்டப்பில் நடித்து  பிரபலம் அடைந்தவர் இவரின் நடிப்பை பார்த்து இப்படியும் பெண்களை வில்லத்தனமாக காட்டலாமா என பல இயக்குனர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அந்த அளவு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் மலைக்க வைத்தார்.

ஸ்ரேயா ரெட்டி- தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த ஸ்ரேயா ரெட்டி விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள திமிரு  திரைப்படத்தில் இளம் வயது வில்லியாக நடித்து அனைவரையும் மிரட்டினார் இதனைத் தொடர்ந்து திமிரு படத்திற்கு பிறகு சாமுராய் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் என்னதான் இவர் பல படங்களில் நடித்தாலும் இவர் நடித்த முதல் திரைப்படத்தில் அனைவரின் பார்வையை ஈர்த்தார் இவரும் பெண் தானா என்ற அளவிற்கு வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் இவர் பேசும் ஒவ்வொரு வசனமும் மிகவும் பிரபலமானது.

ரீமா சென் கிளாமர் ரோல்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரீமாசென் இவர் திடீரென சிம்புவின் வல்லவன் திரைப்படத்தில் அதிரடி வில்லியாக அவதாரம் எடுத்தார் அதிலும் பள்ளி பெண்ணாக தன்னுடைய காதலனுக்காக வில்லத்தனம் செய்யும் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.அழகிய பெண்ணாக வில்லத்தனம் செய்வதற்கு தன்னை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்று பலரும் கூறினார்கள்.

Reema-Sen

சிம்ரன் –  நடனத்திற்கு தான் பெயர் போனவர் சிம்ரன் என்றால் வில்லி தனமாக நடிப்பதில் தன்னை அடித்து ஆளில்லை என்று நிரூபித்தவர் சிம்ரன் பார்த்தேன் ரசித்தேன் திரைப்படத்தில் அழகிய வில்லியாக மாறி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல் இதற்கு முன்பு ஒன்ஸ்மோர் திரைப்படத்திலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பார்த்தேன் ரசித்தேன் திரைப்படத்தில் பிரசாந்த் இடம் அழகிய நட்பாகவும் அவரின் காதல் லைலாவிடம் வில்லத்தனம் ஆகவும் நடந்துகொள்வார்.

simran

திரிஷா- திரிஷா இப்படி வில்லத்தனமாக நடித்து இருப்பாரா என்று பலரும் எதிர்பார்க்காத வகையில் தனுசுடன் நடித்த கொடி திரைப்படத்தில் தனுஷுக்கு வில்லியாக நடித்து அசத்தினார். தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்காக தன்னுடைய காதலனாகிய தனுஷை போட்டு தள்ளும் அளவிற்கு வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுவரை திரிஷாவை ஹீரோவாக பார்த்து வந்த ரசிகர்களுக்கு மாறுபட்ட கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருந்தது.

வரலட்சுமி சரத்குமார் – வரலட்சுமி சரத்குமார் ஹீரோயினாக பல திரைப்படங்களில் நடித்து வந்தார் ஆனால் அந்த திரைப்படங்கள் இவருக்கு பெயர் பெற்றுக் கொடுத்ததா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும் ஆனால் ஒரு சில திரைப்படங்களில் இந்த கதாபாத்திரத்தில் நடித்து யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகவும் பிரபலம் அடைந்தார் அந்த வகையில் சண்டக்கோழி இரண்டாவது பாகத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

varalakshmi1

அதனைத் தொடர்ந்து சர்க்கார் திரைப்படத்திலும் விஜய்க்கு வெளியாக நடித்திருந்தார்.

Leave a Comment

Exit mobile version