ரஜினி, அஜித், சிவகார்த்திகேயனுடன் நடித்து வாழ்க்கையை தொலைத்த நடிகைகள்.! அதிலும் அஜித்தோட நடித்த நடிகை ஆளையே காணுமே…

தமிழ் சினிமாவை பொருத்தவரை ஒரு சில திரைப்படங்களில் நடித்துவிட்டு சில நடிகைகள் ஓஹோ என்று வளர்ந்து வருகிறார்கள் அதிலும் ஒரு சில நடிகைகள் ஒரே ஒரு திரைப்படத்தில் ஹிட் கொடுத்துவிட்டு காணாமல் போய்விடுகிறார்கள். இதெல்லாம் ஒரு ரகம் என்றால் ஒரு சில நடிகைகள் முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்பார்கள் ஆனால் ஒரு சில ஹீரோவுடன் தங்கையாக நடித்து அவர்களின் கேரியரையே தொலைத்து நிற்கும் நடிகைகளை தற்போது இங்கே காணலாம்.

ஐஸ்வர்யா ராஜேஷ் – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்ப காலகட்டத்தில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். பின்பு பிரபல இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்து பிரபலம் அடைந்தார் ஆனால் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் தோல்வியை தழுவியது அதன் பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திரைப்படங்கள் பெரிதாக எடுபடவில்லை.

லட்சுமிமேனன் – கேரளாவை பூர்வமாக கொண்ட லட்சுமிமேனன் தமிழில் சுந்தரபாண்டியன், கும்கி, குட்டி புலி, மஞ்சப்பை என தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து வந்தார் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் ஜிகர்தண்டா, கொம்பன், ரெக்க என பல திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. ஆனால் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியாகிய வேதாளம் திரைப்படத்தில் அஜித்திற்கு தங்கையாக லக்ஷ்மி மேனன் நடித்திருந்தார்.

இவர் இந்த திரைப்படத்தில் நடித்ததில் இவருக்கு பேரும் புகழும் கிடைத்தாலும் பாராட்டும் கிடைத்தாலும் இந்த திரைப்படத்திற்கு பிறகு லட்ஷ்மிமெனனுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. அதன் பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை படிப்பை முடித்துவிட்டு தற்பொழுது என்ன செய்கிறார் என்றும் தெரியாமல் இருந்து வருகிறார்கள் ரசிகர்கள்.

கீர்த்தி சுரேஷ் – நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களவே அமைந்துள்ளன இந்த நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளியாகிய அண்ணாத்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தங்கையாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷுக்கு ரசிகர்களுடைய நல்ல விமர்சனம் கிடைத்தாலும் இந்த திரைப்படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்தது அதனால் இவர் தற்பொழுது பட வாய்ப்பு பெரிதாக இல்லாமல் இருந்து வருகிறார்.

Leave a Comment

Exit mobile version