திருமணதிற்கு பின்பு சினிமாவுக்கு டேக்கா கொடுத்த நடிகைகள்.! ஆனால் இவர்கள் மட்டும் … லிஸ்ட் நீளமா இருக்கே

0
actress
actress

பொதுவாக சினிமாவில் நடிக்கும் நடிகைகள் திருமணத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் ஒரு சில நடிகைகள் குணச்சித்திர வேடங்களிலும் அம்மா அக்கா போன்ற கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர் இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு சினிமாவே வேண்டாம் என உதறித் தள்ளிய நடிகைகளை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

அசின்:- தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தவர் இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து உள்ளார் அதுமட்டுமல்லாமல் இவர் நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தசாவதாரம், கஜினி, சிவகாசி, போன்ற வெற்றி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை அசின் கடந்த 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் கம்பெனி நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். மேலும் அசின் திருமணத்திற்கு முன்பாகவே திருமணம் ஆனால் நான் சினிமாவில் நடிக்க போவதில்லை என ஒரு அறிக்கையும் வெளியிட்டு இருந்தார் அதே போல தற்போது திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

நம்ரதா ஹீரோக்கர்:- தென்னிந்திய மொழி மற்றும் பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் வம்ஷி என்ற திரைப்படத்தில் நடிகர் மகேஷ்பாபு உடன் நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். நடிகை நம்ரதா திருமணத்திற்கு பிறகு சினிமாவை மூட்டை கட்டி போட்டு விட்டார்.

ஜோதிகா:- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான அந்தஸ்தை கொண்டு பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜோதிகா இவர் கிட்டத்தட்ட நடிகர் சூர்யாவுடன் 7 திரைப்படங்களில் ஜோடி சேர்ந்த நடித்துள்ளார் இந்த நிலையில் காக்க காக்க திரைப்படத்தின் போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது அதன் பிறகு இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார் அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் அவ்வப்போது தலிக்கட்டி வந்தார் ஆனால் தற்போது எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார்.

ஜெனிலியா:- தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் துரு துரு நாயகி என்ற பெயர் எடுத்தவர் நடிகை ஜெனிலியா. இவர் தமிழில் விரல்களை விட்டு எண்ணக்கூடிய திரைப்படங்கலில் நடித்து இருந்தாலும் இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இன்று வரையிலும் இருந்து வருகிறது. மேலும் நடிகை ஜெனிலியா ரித்தீஷ் உடன் பாலிவுட்டில் ஒரு திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு தற்போது செட்டில் ஆகிவிட்டார். நடிகை ஜெனிலியா தற்போது வரையிலும் திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பூமிகா:- 80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர்தான் நடிகை பூமிகா. புது புது நடிகைகள் சினிமாவில் அறிமுகம் ஆகும்போது இவருடைய  மார்க்கெட் குறையவே தன்னுடைய நீண்ட நாள் காதலரான பாரத் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

நஸ்ரியா :- ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை நஸ்ரியா. அதன் பிறகு சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்கபட்ட நிலையில் 2014 ஆம் ஆண்டு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு நீண்ட இடைவேளைக்குப் பிறகு மலையாள திரைப்படத்தில் தனது கணவருடன் ஜோடி சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

ஷாலினி:- குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க துவங்கி பின்னர் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். அதன் பிறகு அமர்க்களம் திரைப்படத்தின் போது நடிகர் அஜித் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் நடிகை ஷாலினி திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை.