ரம்பா முதல் சினேகா வரை சினிமாவிற்காக பெயரை மாற்றிக்கொண்ட நடிகைகள்.!

சினிமாவில் உள்ள சில நடிகைகள் தங்களுடைய பெயர் அனைவரது மனதிற்கும் ஈசியாக ரசிகர்கள் மத்தியில் பதிய வேண்டும் என்று சில நடிகைகள் தங்களுடைய பெயரை மாற்றிக் கொண்டு வருகிறார்கள். அப்படி சினிமாவில் தன்னுடைய பெயரை சில நடிகைகள் தங்களுடைய பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

மீரா ஜாஸ்மின்:- சண்டைக்கோழி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பலமொழிகளில் நடித்து பிரபலமானார் நடிகை மீரா ஜாஸ்மின். இவருடைய உண்மையான பெயர் ஜாஸ்மின் மேரி ஜோசப்.

நக்மா:- நடிகை நக்மா 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார். இவர் தற்போது சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியல்வாதியாக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இவருடைய உண்மையான பெயர் நந்திதா அரவிந்த் மொரார்ஜி.

சினேகா:- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் நடிகை சினேகா இவரை புன்னகை அரசி என்றும் அழைத்து வந்தார்கள். மேலும் நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார் தற்போது நடிகை சினேகா ஒரு சில திரைப்படங்களில் தலையாட்டி வருகிறார். மேலும் நடிகை சினேகாவின் உண்மையான பெயர் சுகாசினி ராஜாராம் நாயுடு.

ரம்பா:- தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறந்தவர் நடிகை ரம்பா. இவர் 90களில் முன்னணி நடிகர்களாக இருந்த அனைவருடனும் ஜோடியாக நடித்து பிரபலமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை ரம்பாவின் உண்மையான பெயர் விஜயலட்சுமி யீதி.

இப்படி சினிமாவிற்காக பல நடிகைகள் தங்களுடைய பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Comment