தமிழ் சினிமாவில் அம்மாவாக நடித்து புகழ் பெற்ற நடிகைகள்!! லிஸ்ட் இதோ.

0

actresses who act as a mother role: தமிழ் திரைப்படங்களில் சில நடிகைகள் தங்களது இளம் வயதில் ஹீரோயினாக நடித்தபோது ஹிட் ஆனதை விட அம்மாவாக நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளைப் பெற்று சிறந்த நடிகையாக வலம் வருகின்றனர்.

1.சரண்யா பொன்வண்ணன். தமிழ் சினிமாவில் அம்மா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சரண்யா பொன்வண்ணன் தான். அந்த அளவுக்கு தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களை பெற்றுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்ற நடிகை ஆவார்.

2.ராதிகா சரத்குமார். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். மேலும் நகைச்சுவை மற்றும் அம்மா கதாபாத்திரம் போன்ற படங்களிலும் தற்போது நடித்துக் கொண்டு வருகிறார். அதன் பின்னர் சின்னத்திரை சீரியல்களில் தற்போது கலக்கி கொண்டு வருபவர். இதுபோல அனைத்து துறையிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

3.ரோகினி. இவர் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது அம்மாவாக பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

4.பூர்ணிமா பாக்யராஜ். இவர் தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தற்போது படங்களில் அம்மாவாக நடித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் சீரியலிலும் இறங்கியுள்ளார்.

5.கோவை சரளா. இவர் பெண்களில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் இவர் தற்போது அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.