சினிமா உலகில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்தாலும் அவர்களுக்கு ஈடு இணையாக தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து வருபவர் நடிகர் தனுஷ். இவரது திரைப்படங்கள் பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்திய படங்கள் இல்லை என்றாலும் அந்த படங்கள் அவரது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகவே இருப்பதால் அவர் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துள்ளார்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய திரைப்படங்களில் இவரது நடிப்பு வேற லெவல் இருந்தது என்பது குறிபிடத்தக்கது இவரது நடிப்பு திறமை பார்த்து ஆச்சரியப்பட்டுப் போன பிற மொழி தயாரிப்பாளர் இயக்குனர்கள் தற்போது வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து வருகிறது. அந்தவகையில் நடிகர் தனுஷ் பாலிவுட் ஹாலிவுட்டிலும் அடிக்கடி அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா உலகில் தொடர்ந்து வெற்றிக்கனியை ருசித்து ஓடிக்கொண்டிருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இப்போது சறுக்கலை சந்தித்து உள்ளார்.
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டு 18 வருடங்கள் சிறப்பாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிய போவதாக அறிவித்தனர். இதனையடுத்து ரஜினி மற்றும் ரஜினியின் மனைவியும் முதலில் இருவரையும் சேர்த்து வைக்க எவ்வளவோ பேசினார். ஆனால் இருவரும் இந்த விஷயத்தில் மட்டும் பிடிவாதமாக இருந்ததால் இவர்களை சேர்த்து வைக்க முடியாமல் போனது. ரஜினியின் குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்களின் மூலமாகவும் சொந்தக்காரர் மூலமாகவும் பேச்சுவார்த்தை நடத்தியது ஆனால் எந்த பலனும் இதுவரை கைகூடவில்லை.
இது ஒரு பக்கம் இருக்க நடிகர் தனுஷ் விவாகரத்து பெற்ற பின்பும் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் அவருடன் சரியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த முடியாத சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது இதை உணர்ந்து கொண்ட லதா ரஜினிகாந்த் இப்பொழுது ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார். அதாவது இனி தனுஷை வைத்து எந்த தயாரிப்பாளரும் இயக்குனரும் படத்தை இயக்கக் கூடாது என கேட்டுக் உள்ளதாக ஒரு கிசுகிசு செய்தி சினிமா வட்டாரங்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது.
மேலும் தனுஷ் உடன் இருக்கும் சினிமா பிரபலங்கள் பலரும் இவரை வைத்து சினிமா உலகில் நல்ல இடத்தை பிடித்து விடலாம் என கனவு இருந்த நிலையில் லதா ரஜினிகாந்த அவர்களுக்கும் ஒரு ட்விஸ்ட்டை வைத்துள்ளார். இதை உணர்ந்து கொண்ட அந்த நடிகர் நடிகைகள் பலரும் தனக்கு கேரியர் தான் முக்கியம் இப்பொழுது பட வாய்ப்பு இல்லை என்றால் பரவாயில்லை எனக் கூறி தனுஷிடம் இருந்து நைசாக கழன்று உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தனுஷ் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறார்.