40,50 வயதை தாண்டியும் இன்னும் இளமை மாறாமல் அழகுடன் இருக்கும் நடிகைகள்!! லிஸ்ட் இதோ.

Actresses over 40 years old and still young : சில நடிகைகள் 40 வயதை தாண்டினாலும் இன்னும் 20 போன்று பொலிவுடனும் அழகாகவும் உள்ளார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களை பற்றி ஒரு லிஸ்ட்.

நதியா.

இவர் தமிழில் முதன்முதலில்  பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிக்கும் போது நதியா கொலுசு, நதியா புடவை,  நதியா வளையல், என எதை எடுத்தாலும் இவர் பெயர்தான். இவரது தற்போதைய வயது ஐம்பதை தாண்டினாலும் இன்னும் முன்பு பார்த்ததுபோல அப்படியே உள்ளார். தற்போது இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுடன் சேர்த்து பார்க்கும்போது  யார் அம்மா பொண்ணு  என்று கூட தெரியவில்லை அந்த அளவுக்கு அழகு மாறாமல் உள்ளார்.

ரம்யா கிருஷ்ணன்.

இவர் படையப்பா படத்தில்  நீலாம்பரியாக நடித்து மக்களிடையே பெரும் மதிப்பைப் பெற்றார். இன்று வரை நீலாம்பரிக்கு நிகராக யாரும் நெகட்டிவ் ரோலில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றுவரை தனது அழகு குறையாமல் பல சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்ததே.

ராதா.

நடிகை ராதாவின் வயது 54  தாண்டியும் இன்னும் சின்னத்திரையிலும் வெள்ளி திரையில் நடித்துக்கண்டிருக்கிறார். இன்னும் அவரது பேச்சு, நடனம், நடிப்பு என எதுவும் குறையாமல் அழகுடன் தன்னை மேம்படுத்தி வருகிறார்.

ராதிகா.

வயது 56 தாண்டியும் இன்னும் முன்பு பார்த்தது போல அப்படியே உள்ளார். இவரும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தொடர்ந்து நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்ததே. அவரது நடிப்பு, நடனம், பேச்சு என எதுவும் குறையாமல் அப்படியே உள்ளார்.

ரேவதி.

நடிகை ரேவதியின் தற்போதைய வயது 53. தற்போது இவர் ஜோதிகாவின் நடிப்பில் வெளிவந்த ஜாக்பாட் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெள்ளித்திரையில் கால் எடுத்து வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் சீரியலில் நடித்துவருகிறார்.

குஷ்பு.

ரசிகர்கள் இவருக்காக கோவில் கட்டி இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவர் அந்த காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர்.  இவரது வயது தற்போது 49 ஆனால். இவர் இன்னும் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடித்துக்கொண்டு இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.  இவர் தற்போது ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். ஆனால் இன்னும் கூட இவரது அழகு குறையாமல் நடித்துவருகிறார்.

ஐஸ்வர்யா ராய்.

உலக அழகி என்றாலே நினைவுக்கு வருவது முதலில் ஐஸ்வர்யா ராய் தான்.  அந்த அளவுக்கு இன்னும் இவருடன் போட்டி போடும் அளவுக்கு எந்த அழகியும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இவருடைய தற்போதைய வயது 46 ஆனால் பார்த்தால் இருபது வயது போன்று இருப்பார்.

சிம்ரன்.

இளைஞர்களின் கனவு கன்னியாகவும் மற்றும் இடை அழகியாகவும் வலம் வந்தவர்.  இவரின் நடனத்தின் மூலம் ரசிகர்களை தன் வசம் கட்டி வைத்திருந்தார். மேலும் தற்போது இரண்டு குழந்தைகள் பிறந்து இருந்தாலும் இன்னும் கொஞ்சம் கூட அழகில் குறையாமல் இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தற்போதும் வெள்ளித்திரையில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

மீனா

இவர் தற்பொழுது கூட போட்டோ ஷூட் எடுத்து தற்போது உள்ள நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார். அந்தளவுக்கு தன்னை அழகுடன் மேம்படுத்தி வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகைகளாக இருந்த 90 நடிகைகள் வயதில் நாற்பது, ஐம்பதை கடந்தாலும் இன்னும் சின்னத்திரை,வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போதுள்ள நடிகைகள் இவர்களிடம் போட்டி போட்டாள் தோத்துப் போவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

Leave a Comment