மகா சிவராத்திரி முன்னிட்டு ஈஷா யோகா மையத்திற்கு படையெடுத்த நடிகைகள்.! யார்? யார்? பாருங்க..

ஆண்டுதோறும் பிப்ரவரி 18ஆம் தேதி அன்று மகா சிவராத்திரி மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான திரைப்பட நடிகைகள் ஈஷா யோகா மையத்திற்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் குறிப்பாக ஆண்டுதோறும் சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா என அனைத்து நடிகைகளும் ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் கலந்துக் கொண்டு வருகின்றனர்.

அதேபோல் இந்த ஆண்டும் மகா  சிவராத்திரி முன்னிட்டு #mahashivratri ஹாஸ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இந்த வருட மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்திற்கு நடிகைகள் அடுத்தடுத்து செல்லும் நிலையில் அங்கு அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தங்களுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.

இன்று இந்தியா முழுவதும் அனைத்து சிவாலயங்களிலும் சிவராத்திரி வழிபாடு நடைபெற இருக்கிறது. அந்த வகையில் முக்கியமாக திருவண்ணாமலை, சிதம்பரம், காசி விஸ்வநாதர் கோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் போன்ற இடங்களில் மிகவும் பிரம்மாண்டமாக மகா சிவராத்திரி விழா இன்று நடைபெற இருக்கிறது.

Mrinalini
Mrinalini

அந்த வகையில் வெள்ளியங்கிரியில் அமைந்துள்ள ஆதியோகி சிலைக்கு முன் அமர்ந்து அனைவரும் விடிய விடிய கண் விளைக்குவார்கள் அவ்வாறு பொதுமக்கள் மட்டுமல்லாமல் பல நடிகைகள் மற்றும் பிரபலங்கள் ஈஷா யோகா மையத்தை நோக்கி செல்கின்றனர். இந்நிலையில் தற்பொழுது கோப்ரா பட நடிகை மிருணாளினி ரவி மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்திற்கு சென்றுள்ளார்.

Mamata Mohandas
Mamata Mohandas

அவர் ஆதியோகி சிலைக்கு முன்பு எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு ‘வைப்ஸ்’ என கேப்டன் போட்டுள்ளார். இவரை அடுத்து எனிமி படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்த நடிகை மம்தா மோகன்தாசும் தனது காரில் ஈஷா யோகா மையத்திற்கு சென்று கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் மேக ஆகாஷ் ஆதியோகி சிலைக்கு முன்பு வழிபாடம் நடத்தும் போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இவ்வாறு இந்த நடிகைகளை அடுத்து மேலும் இன்னும் ஏராளமான நடிகைகள் இன்று இரவு ஈஷா யோகா மையத்திற்கு செல்வார்கள்.

meha akash
meha akash

Leave a Comment