சினிமா வாய்ப்புக்காக பலரிடம் ஏமாந்து மனம் உருகும் நடிகைகள் !! இதுவும் உண்மைதான் எனக்கூறும் ரசிகர்கள்.

0

actresses cheated by directors:தமிழ் சினிமாவில் 2018 ஆம் ஆண்டு வெளியான தனுஷின் வடசென்னை படத்தில் முன்னணி நாயகிகளாக நடித்தவர்கள் தான் ஆண்ட்ரியா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ். இவங்க இந்த படத்திற்கு பிறகு நெருங்கிய தோழிகள் ஆகவே மாறிட்டாங்க. இரண்டு பேரும் திடீரென இன்ஸ்டாகிராமில் லைவ் இல் தோன்றி சினிமாவில் பெண்களுக்கு இருக்கும் நிலை பற்றி ஒரு ஒப்பன் டாக் கொடுத்திருக்காங்க.

ஆண்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்து வரும் இந்த சினிமாவில் பெண்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நோக்கத்தில் கேலிக்கூத்தாக ஏமாற்றுகிறார்கள். ரசிகர்களாகிய நீங்கள் இந்தப் பிரச்சினை ஒரு பக்கமிருந்து பார்க்காமல் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பிலிருந்தும் கொஞ்சம் கவனிக்கணும் எனக் கூறுகிறார்கள்.

உதவி இயக்குனர்கள் தன்னை வைத்து படம் இயக்குவதாக கூறி ஏமாற்றிய கதைகளும் இருக்கு. எங்கே யாரை நம்புறது யாரை நம்பக் கூடாதுன்னு கண்ண கட்டி காட்டுல விடுவது போல இருக்குன்னு மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.

தொடர்ந்து ஆண்ட்ரியாவும் சினிமாவில் நடக்கும் பெண்களை அவரவர் தாயாக,தந்தையாக நினைக்கும் நிலைமை வரவேண்டும் என்று ஆதங்கத்துடன் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இரண்டு நடிகைகளும் ரசிகர்களின் கமெண்ட் பதிவை படிப்பதை நிறுத்தி விட்டதாகவும் கூறியுள்ளார்கள்.

ஏனென்றால் நெகட்டிவ் அதிகம் இருக்கும் நேரத்தில் பாசிட்டிவ் தேடிச்செல்லும் எங்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள் என்று கெஞ்சும் நிலைமை வந்து விட்டது. மேலும் சினிமாவில் ஒரு சின்ன பிரச்சனை வந்தால் கூட பெண்கள்தான் காரணம் என்ற நிலைமை மாறவேண்டும் என்று மனமுருகி கூறியுள்ளார்கள்.