தமிழ் திரை உலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த் இவர் சமீபத்தில் நடந்த கார் விபத்து காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து வந்து கொண்டிருந்தார்.
இதன் காரணமாக நடிகை யாஷிகாவின் மீது அதிவேகமாக கார் ஓட்டுவது மற்றும் உயிர் சேதம் என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இவ்வாறு நடந்த சம்பவத்தின் பிறகாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள புகைப்படங்கள் பலவற்றையும் டெலிட் செய்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவையும் யாஷிகா வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால் நான் தற்போது என்ன நிலையில் இருக்கிறேன் என்பதை தெரிவிக்க என்னால் முடியவில்லை ஏனெனில் என்னுடைய தோழி பவானியை நான் ரொம்ப மிஸ் செய்கிறேன் என்றும் அவருடைய குடும்பத்திற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்றும் கோரியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் நான் செய்த தவறுக்கு வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடன் இருப்பேன் என்றும் உன்னுடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டுமென்றும் நீ மறுபடியும் பிறந்த என்னிடம் வந்து விடுவாய் என்று நான் சாதனை செய்கிறேன். என்றாவது ஒருநாள் உன் குடும்பத்தினர் என்னை மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

மேலும் யாஷிகா முதுகில் எலும்பு முறிவு மற்றும் கால்களில் எலும்பு முறிவு என பல்வேறு சிகிச்சைக்கு பெண் தற்போது ஓய்வெடுத்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் சுமார் ஐந்து மாதத்திற்கு யாஷிகா நிற்கவோ நடக்கவோ முடியாது என மருத்துவர் கூறிவிட்டார்களாம். இந்நிலையில் யாஷிகா மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
