கிளாமர் இமேஜ் மாறவேண்டும் என கவர்ச்சி நடிகை பரபரப்பு பேட்டி.!

சினிமாவில் ஒரு நடிகை பிரபலமடைய வேண்டும் என்றால் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இதன் மூலம் திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார்கள். மேலும் இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும் பலர் இவர்களை அசிங்கமாக திட்டுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகைகள் தற்பொழுது சமூக வலைதளத்தில் தனது கிளாமரான புகைப்படத்தின் மூலம் ரசிகர்களை கிரங்கடித்து வரும் நடிகை தான் யாஷிகா ஆனந்த். இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த வந்தார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் பட்டிதட்டி எங்கும் பிரபலமடைந்த இவர் இந்நிகழ்விற்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலமடைந்ததால் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை தொடங்கினார்.

கவர்ச்சியில் முன்னனி நடிகைகளாக வலம் வந்த சில்க் சுமிதா போன்ற நடிகைகளை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்பொழுது எஸ்கே சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் இவர்கள் இணைந்து நடித்த கடமையை செய் திரைப்படம் வருகின்ற 12ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார் யாஷிகா ஆனந்த்.

மேலும் இந்த திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட்ராகவன் இயக்கிவுள்ளார். நடிகை யாஷிகா ஆனந்த்: பல போராட்டங்களுக்குப் பிறகு இந்த திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகிறது முதன் முதலில் இந்த பட கதையை என்னிடம் கூற வந்த போது என்னால் இந்த பாத்திரத்தை பண்ண முடியுமா என பயந்தேன், ஆனால் செட்டில் இயக்குனர் என்னை சிறப்பாக நடிக்க வைத்தார் எனக்கு ஒரு கிளாமர் ஹீரோயின் என்று அடையாளம் இருக்கிறது.

yashika ananth
yashika ananth

அதை இந்த படத்தின் மூலம் மாறும் இந்த படத்தில் நான் பெரிய உழைப்பை கொடுத்துள்ளேன் இனிமேல் எனக்கு நிறைய நல்ல படங்கள் வரும் என நம்புகிறேன், ஒளிப்பதிவாளர் உடைய ஒவ்வொரு பிரேமும் அழகாக இருக்கும் இந்த படம் ஒரு ஃபேமிலி என்டர்டைமென்ட் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Leave a Comment