போலீஸ் அதிகாரியாக மிரட்டும் யாஷிகா ஆனந்த்.!வைரலாகும் சல்பர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!!

yashika
yashika

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி முகம் தெரியாத பலரும் இந்நிகழ்ச்சியின் மூலம் எளிதில் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்துள்ளார்கள். தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 4 சீசன் முடிந்துள்ளது.

அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 2 மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் நிகழ்ச்சியில் வெற்றி பெறவில்லை என்றாலும் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

நிகழ்ச்சிக்கும் முன்பே இவர் 2014ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்திருந்தார்.

இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைவதற்கு காரணம் கவர்ச்சிதான்.  சோஷியல் மீடியாவில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் மனதில் கூட்டியேறினார்.

yashika 1
yashika 1

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் இவருக்கும் ஜாம்பி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து தற்பொழுது சல்பர் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரதில் போலீசாக நடித்து வருகிறார். இப்படத்தின் போஸ்டரை யாஷிகா ஆனந்த் தற்பொழுது வெளியிட்டுள்ளார். இதோ அந்த போஸ்டர்.

yashika 2
yashika 2