தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவர் யாஷிகா ஆனந்த். இவர் மாடலிங் துறையில் இருந்து வந்து பின்பு 2016-ஆம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக நடித்திருந்தார். பின்பு துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களிடையே நீங்கா இடம் பிடித்துள்ளார்.
மேலும் இவர் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி அந்த நிகழ்ச்சியில் நீண்டதூரம் பயணித்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த யாஷிகாவிற்கு பல்வேறு பட வாய்ப்புகள் வந்தவண்ணமே உள்ளன.
மேலும் இவர் சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளம் ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் இவருக்கு பல்வேறு ரசிகர்கள் கூட்டமே உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் யாஷிகா அவரது தோழிகளுடன் இணைந்து காரில் சென்றபோது அந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது.
மேலும் அந்த விபத்தில் யாஷிகாவின் தோழி ஒருவர் உயிரிழந்த நிலையில் யாஷிகாவும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தான் இவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் தற்போது முழுமையாக குணம் அடைந்து படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் என அனைத்திலும் பிஸியாக உள்ளார்.
மேலும் யாஷிகா மீண்டும் சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட தொடங்கியுள்ளார். அந்த நிலையில் இவர் தற்போது கருப்பு நிற உடையில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம் நீங்களே பாருங்கள்.
