தளபதி 65 திரைப்படத்தில் 9 வருடம் கழித்து விஜயுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை.! இதோ மாஸ் அப்டேட்

0

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர வேண்டியது ஆனால் ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் கொண்டே போகிறது. இந்த நிலையில் இந்த சூழ்நிலை மாறிய பிறகுதான் திரைக்கு  மாஸ்டர் திரைப்படம் வரும் எனக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் விஜய் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது அந்த வகையில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கப் போவதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த திரைப்படம் தளபதி நடிக்கும் 65வது திரைப்படமாகும், கொரனோ ஊரடங்கு காரணமாக இந்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை, இந்த நிலையில் தளபதி 65 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பல ரசிகர்களிடம் இருந்து வருகிறது.

இப்படி இருக்கும் நிலையில் தளபதி 65 திரைப்படத்தில் விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே அல்லது ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால் இவர்களில் ஒருவர்தான் நடிக்கப்பவதாக தகவல் வெளியானது.

அப்படி இருக்கும் வகையில் தற்பொழுது தளபதி 65 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஒன்பது வருடம் கழித்து பிரபல நடிகை இணைய இருக்கிறார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது, 9 வருடங்களுக்கு முன்பு விஜயுடன் நடித்த அசின் தான் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இதற்கு முன் அசின் விஜய் நடிப்பில் வெளியாகிய போக்கிரி மற்றும் சிவகாசி ஆகிய திரைப்படங்கள் மாபெரும் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

asin daughter
asin daughter