ரஜினி கமலையே சம்பள விஷயத்தில் அசால்டாக தூக்கி சாப்பிட்ட நடிகை.! அப்படி என்னதான் இருக்கிறது இந்த நடிகை கிட்ட..

தமிழ் திரை உலகில் இரண்டு முன்னணி ஜாம்பவான்கள் போனதற்குப் பிறகு ரஜினி கமல் ஆகியோர் தமிழ் சினிமாவை மிகச் சிறப்பாக நிலை நிறுத்தி  தற்போது வரையிலும் கட்டி ஆண்டு  வருகின்றனர் அதிலும் குறிப்பாக ரஜினி தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து இளம் நடிகர்களுக்கு  வழிவிடாமல் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை நிலைநாட்டி  வருகிறார்.

ஒரு படத்திற்கு ரஜினி தற்பொழுது  100 கோடி சம்பளம் வாங்குகிறார்  ஆரம்ப காலகட்டத்தில் பல நடிகைகளின் சம்பளத்தை கூட தொட முடியாமல் திணறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவுலகில் ரஜினி கமல் ஆகியோர் வெவ்வேறு கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்கள் ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து உள்ளனர் அந்த வகையில் ஸ்ரீதர் இயக்கத்தில் இளமை ஊஞ்சலாடுகிறது.

இத் திரைப்படத்தில் ரஜினி, கமல், ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா போன்ற பலர் இணைந்து நடித்திருந்தனர் இத்திரைப்படத்தை சுரேஷ் என்பவர் தயாரித்து இருந்தார் இத்திரைப்படத்தில் ரஜினிக்கு சம்பளமாக 70 ஆயிரம் கொடுக்கப்பட்டது. ஆனால் இவரை விட நடிகை ஜெயசித்ரா 1 லட்சத்து 10000 ரூபாய் சம்பளம் வாங்கினார் என்று தயாரிப்பாளர் கூறினார்.

அப்பொழுதைய காலகட்டத்தில் ரஜினியை விட ஜெயசித்ராவிற்கு நிறைய ரசிகர்கள் இருந்ததோடு சினிமாவில் செம மவுசும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

jayachitra2
jayachitra2

Leave a Comment