நடுரோட்டில் டான்ஸ் மாஸ்டருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட நடிகை!! வைரலாகும் வீடியோ.

actress who dance with Dance Master at Road !! The video is viral: ரேணிகுண்டா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சஞ்சனா சிங். பின்னர் இதனை தொடர்ந்து ரகளபுரம், அஞ்சான், தனி ஒருவன் போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் தற்போது இவர் பிரபல தொலைகாட்சியில் டான்ஸ் சோ மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தனது உடல் கட்டுக்கோப்பாக இருப்பதால் அவ்வப்போது தான் செய்யும் ஒர்க்கவுட் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார்.

அந்தவகையில் நடிகை சஞ்சனா டான்ஸ் மாஸ்டர் ராதிகாவுடன் சேர்ந்து நடுரோட்டில் முருகன் பாட்டிற்க்கு  மங்களகரமான மஞ்சள் புடவையில் குத்தாட்டம் போட்டு அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சாமி பாட்டுக்கு இந்த மாதிரியா ஆட்டம் ஆடுவது என தாறுமாறாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு பக்கம் இருக்கையில் தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://youtu.be/Cr2gBwRo25Q