பிரபல வாரிசு நடிகை வீட்டுக்கு வந்த பாம்பை அடிக்காமல் வெளியே எடுத்துப் போடும் வீடியோ!!

0

actress who throw out snake from her house: பிரபல  தமிழ் நடிகர் அருண்பாண்டியன் இவர் 90களில் பல படங்களில் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல் இவர் வில்லு, அங்காடித்தெரு, முரட்டு காளை, ஜூங்கா போன்ற படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை தொடர்ந்து இவரது மகள் கீர்த்தி பாண்டியன் திரையுலகிற்கு தும்பா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகை கீர்த்தி பாண்டியன் கொரோனா காலத்தில் தனது வயலில் டிராக்டர் ஓட்டினார். மேலும் அது மட்டுமல்லாமல் வயலில் நெல் பயிறை நட்டார்.

அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு விவசாயம் காப்போம் எனவும் கூறியிருந்தார். மேலும் விவசாயம் நம்முடைய சொத்து, நாம் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும் என கூறியிருந்தார்.

நடிகை கீர்த்தி பாண்டியன் தனது வீட்டிற்குள் வந்த பாம்பை தனியாளாக அடிக்காமல் பட்ஜெட்டில் எடுத்து போட்டு வீட்டை விட்டு வெளியே கொண்டுபோய்  விட்டுவிட்டார்.  அதை வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.