மனோரமா வாழ்க்கை வரலாற்றில் இந்த நடிகையா.? இது பலான படம் இல்லை மேடம் என கலாய்க்கும் ரசிகர்கள் .

actress wants to act in manoramma biography movie: சினிமாவில் பல நடிகைகள் சாதித்து சரித்திரம் படைத்துள்ளார்கள். அந்த வகையில் உயிருடன் இல்லை என்றாலும் சரித்திர நாயகியாக அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை மனோரமா.

இவர் சினிமாவில் குடும்ப பெண்ணாக, காமெடி நடிகையாக, அம்மாவாக, பாட்டியாக அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து தனது சிறந்த நடிப்பு திறமையை அனைவருக்கும் தெரிய வைத்தார். இவர் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து சாகும் வரை சினிமாவில் கலக்கி வந்தார். இவர் தற்போது உயிருடன் இல்லை என்றாலும் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் சினிமாவில் எந்த முன்னணி நடிகைகள் சாதித்து இறந்திருந்தாலும் அந்த நடிகைகளை வைத்து தற்பொழுது உள்ள நகைகள் அவர்களின் வரலாற்றை படமாக எடுத்து நடித்து வருகிறார்கள். அந்த வகையில் கீர்த்தி சுரேஷும் தற்போது சாவித்திரி வரலாறு படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். எனவே இப்படத்திற்காக இவர் பல விருதுகளை வென்றார். அந்த வகையில் சமீபகாலமாக ஐஸ்வர்யா ராஜேஷ் நான் மனோரமா வரலாற்று திரைப்படத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறி வந்தார். இவருக்கு ரசிகர்கள் பல எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.

ஏனென்றால் இவர் தற்போது தனுஷுடன் இணைந்து நடித்த வடசென்னை திரைப்படத்தில் மிகவும் நெருக்கமாகவும் ஆபாச வார்த்தைகள் அதிக அளவில் இருப்பதால் இவருக்கு பெரிய கெட்ட பெயரை ரசிகர்கள் மத்தியில் வாங்கி கொடுத்தது. எனவே ரசிகர்கள் மனோரமா வரலாற்று திரைப்படத்தில் நடிக்க உங்களுக்கு தகுதி இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெரும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.

Leave a Comment