என் கவர்ச்சியை மட்டும் பார்த்தவர்கள் மத்தியில் என் மனதை மட்டும் பார்த்தவர் தான் சத்தியராஜ் தான்..! மனதை நெகிழ வைத்த பிரபல கவர்ச்சி நடிகை..!

0

actress visithara latest speech: தமிழ் திரை உலகில் காமெடி கலந்த நடிகராக பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் நடிகர் சத்யராஜ்.  தற்போது அவருக்கு வயது முதிர்ந்தாலும் என்றும் அவர் உடலை கட்டுக்கோப்பாக தான் வைத்துள்ளார்.

பொதுவாக நடிகர் சத்யராஜ் தான் நடிக்கும் திரைப்படத்தில் அவருக்கான கதாபாத்திரம் மிக சிறப்பாக இருந்தால் மட்டுமே அதில் நடிப்பார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அதுமட்டுமில்லாமல்  எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதற்கு தகுந்தார்போல் தன்னை மாற்றிக் கொள்வதில் வல்லமை படைத்தவர்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் என்றால் அது பாகுபலி திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் கட்டப்பா எனும் கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடித்து இருப்பார். இந்த திரைப்படத்தில் பிரபாஸுக்கு இணையாக இவருடைய கட்டப்பா கதாபாத்திரம்அமைந்திருக்கும்.

இந்த திரைப்படத்தில் மாபெரும் வெற்றியை கண்ட நடிகர் சத்யராஜ் தன்னுடைய மார்க்கெட் திரைஉலகில் குறைந்ததும் திரைப்படங்களில் அப்பா அண்ணன் மாமா போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் ஒரு திரைப்படத்தை இயக்கி உள்ளார் அது வேறு எந்த திரைப்படமும் கிடையாது சத்யராஜ் இயக்கத்தில் உருவான வில்லாதி வில்லன் திரைப்படம் தான் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் ஓரளவுக்கு படம் நன்றாக தான் இருந்தது.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் நடிகை விசித்ராவை நமது சத்யராஜ் மினிஸ்டர் அம்சவல்லி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பார் பொதுவாக நமது நடிகையிடம் அனைவரும் கவர்ச்சியை மட்டுமே எதிர் பார்த்தார்கள் ஆனால் நமது சத்யராஜ் இவரிடம் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருந்தார்.

villathi villan
villathi villan

இந்நிலையில் ரசிகர் ஒருவர் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வர வேண்டிய நமது விசித்திரா சத்யராஜ் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக இன்று ஒன்றுமில்லாமல்  தவித்து வருகிறார் என கிண்டல் அடித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த நமது நடிகை சத்யராஜ் என்னை நம்பி இப்படி ஒரு நல்ல கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்து இருந்தார் எனவும் பலரும் என்னை ஒரு கவர்ச்சிப் பொருளாக பார்த்த நிலையில் இப்படி என்னை ஒரு சிறந்த நடிகையாக நினைத்தவர் அவர் ஒருவர்தான் என விசித்திரா கூறியுள்ளார்.

visithra
visithra