பலர் என்னை கொல்ல முயற்சிப்பதாக புகார் அளித்துள்ள விஷால் பட நடிகை.! அதிர்ச்சியில் திரைப்பிரபலங்கள்..

vishal
vishal

பொதுவாக சினிமா என்றாலே நடிகைகளுக்கு பெரிதாக பாதுகாப்பு இல்லை என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் ஏராளமான பிரபல நடிகைகள் சினிமாவில் நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை என பேட்டியளித்துள்ளவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் தற்பொழுது விஷால் பட நடிகை ஒருவர் என்னை கொல்ல பலர் முயற்சி செய்கிறார்கள் என புகார் அளித்துள்ளார்.

இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற படத்தில் மூன்றாவது கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை தனுஸ்ரீ.

இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக தமிழில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டார் மேலும் பாலிவூட்டில் முன்னணி பிரபலங்கள் மீது மீடு புகார் கொடுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இப்படிப்பட்ட நிலையில் சமீப ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இவர் என்னை கொல்ல முயற்சிகள் நடப்பதாக கூறி பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

மேலும் புகார் ஒன்றையும் அளித்துள்ளார் மேலும் தனது காரின் பிரேக் அடிக்கடி பழுதாகி விடுவதாகவும் அதனால் பெரும் விபத்தில் சிக்கி கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் அதேபோன்று என்னை விஷம் வைத்து கொல்ல சதி நடந்ததாகவும் பகீர் புகார் ஒன்றை அளித்துள்ளார். இவ்வாறு இவர் கூறியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மேலும் இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக நடிகை தனுஸ்ரீ கூறும் அனைத்து தகவலும் உண்மையா இல்லையா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இது குறித்து உண்மையான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இவர் தமிழில் நடிக்கவில்லை என்றாலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.