பிக் பாஸ் வீட்டிற்கு திடீரென விசிட் அடித்த விஜய் சேதுபதி பட நடிகை.! அட இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே…

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த ஆறாவது சீசனில் 21 போட்டியில் கலந்து கொண்டுள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த டாஸ்க் நடைபெற்று வருகிறது அதாவது போட்டியாளர்கள் குடும்ப உறுப்பினர்களை காண ஆவலுடன் இருந்து வருகிறார்கள்.

நேற்று மைனாவின் கணவர் மற்றும் மகன் வந்திருந்தார்கள் அப்பொழுது மைனாவின் கணவர் மைனாவிடம் விளையாட்டை கவனத்துடன் விளையாடி தப்பு நடந்த கேள்வி கேளு என சில அறிவுரைகளை கூறிவிட்டு சென்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் அமுதவனின் மனைவி மற்றும் இரண்டு மகன்களும் வந்திருந்தார்கள்  அமுதாவாணனின் மகன் சிவின், அசிம் விக்ரமன் போல் மிமிகிரி செய்துள்ளார் அதுமட்டுமில்லாமல் பெரியாரைப் போல் பேசி விக்ரமன் மனதில் இடம் பிடித்தார்.

அமுதவாணனை போல் அவருடைய மகனுக்கும் பல திறமைகள் இருக்கிறது. சிவினின் தோழியும் அவரது வருங்கால கணவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தனர் சிவின் அவர்களை கட்டி எனக்கு வரவேற்று உன்னை இங்கு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை வந்ததற்கு மிகவும் நன்றி என தெரிவித்தார் சிவனின் தாய் மற்றும் சகோதரி இடம் பேசியதாகவும் அவர்கள் வர மறுத்து விட்டதால் சண்டை போட்டு உன்னை பார்க்க வந்ததையும் அவரது தோழி வருத்தத்துடன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தற்பொழுது வெளியாக்கிய பிரமோ வீடியோவில் ரட்சிதாவின் அம்மா வந்திருந்தார் வலிமை படத்தில் வரும் அம்மா பாடலுடன் வந்த அம்மாவை பார்த்து ரட்சிதா பாசத்தில் கதறி அழுதுள்ளார். இந்த நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள புரோமோ வீடியோவில் பிக் பாஸ் வீட்டிற்கு  ஆரிரோ ஆராரிரோ  இது தந்தையின் தாலாட்டு என்ற பாடலுடன் கதவு திறக்க மணிகண்டனின் மகன் மனைவி அவரது அம்மா வருகிறார்கள் மகனைப் பார்த்த மணிகண்டன் மகிழ்ச்சியில் கத்திக்கொண்டே ஓடி முட்டி இட்ட தனது மகனை கட்டி தழுவுகிறார்.

அதன் பிறகு மனைவி மற்றும் அம்மாவை பார்த்து நலம் விசாரிக்க சீக்ரெட் அறையில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் திடீரென போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஏற்கனவே தன்னுடைய அண்ணா மணிகண்டாவுக்கு  அனைவரும் ஓட்டு போடுங்கள் என ஐஸ்வர்யா ராஜேஷ் வீடியோவில் கூறியிருந்தார் இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஐஸ்வர்யா ராஜேஷ் வந்துள்ளதால் அவரின் ரசிகர்களின் ஓட்டு மணிகண்டாவுக்கு கிடைக்கும் என தெரிகிறது.

அதுமட்டுமில்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷ் எதற்காக திடீரென பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார் என்றால் ஐஸ்வர்யா ராஜேஷ் லீட் ரோலில்  நடித்துள்ள டிரைவர் ஜமுனா திரைப்படம் வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருப்பதால் அதற்கான பிரமோஷனாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment