அஜித்தை போல் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் விஜய் சேதுபதி.!ரசிகர்களை வெகுவாக கவர்ந்த புகைப்படம்.

ajith vijay sethupathi
ajith vijay sethupathi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. சமீப காலங்களாக இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் தான்.

அந்த வகையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இவர்களின் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர் இத்திரைப்படத்தின் மூலம் விஜய்சேதுபதி புதிதாக வில்லனாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கில் உப்பண்ணா திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் இத்திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் தான். இத்திரைப்படத்தை தொடர்ந்து மே மாதம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இவர் நடித்துள்ள லாபம் திரைப்படம் வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி பத்திற்க்கும் மேற்பட்ட திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இவ்வாறு ஹீரோவாகவும், வில்லனாகவும் தென்னிந்திய சினிமாவில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கலக்கி வருகிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி மாஸாக இருக்கும் போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பில்லாவில் அஜித்தை பார்ப்பது போல் இருக்கிறது என்று பலர் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.