முட்டி மோதி உடல் எடையை குறைத்தும் கிண்டல் செய்த ரசிகர்கள்..! தகுந்த பதிலடி கொடுத்த வித்யூலேகா..!

தமிழ் திரை உலகில் காமெடி நடிகையாக களமிறங்கி ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து போட்டவர் தான் நடிகை வித்யுலேகா. பொதுவாக காமெடி செய்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை உண்டு அந்த வகையில் தன்னுடைய பேச்சின் மூலம் ரசிகர்களை கவர்வது ஒரு வகையினர் மற்றொரு வகையினர் தன்னுடைய உருவத்தை வைத்து காமெடி செய்வார்கள்.

இவ்வாறு உருவத்தை வைத்து காமெடி செய்யும் பொழுது மற்றவர்கள் கேலி செய்தாலும் அதை எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்து வருபவர்தான் வித்யூலேகா இவர் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகள் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

வித்யூலேகா தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமா பக்கமும் நகைச்சுவை நடிகராக வலம் வந்துள்ளார் அந்த வகையில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த நீதானே எந்தன் பொன்வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் நமது நடிகை சமந்தாவிற்கு தோழியாக நடித்து இருப்பார். இவ்வாறு இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, வீரம், ஜில்லா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க போன்ற பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வித்யூலேகா உடல் எடையை வைத்து காமெடி செய்தால் ரசிகர்கள் நிராகரித்து விடுவார்கள் என்று கூறியது மட்டுமல்லாமல் தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்து புகைப்படம் சிலவற்றை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் இவர் வாரத்திற்கு ஆறு முறை உடற்பயிற்சி செய்து கணிசமான உணவு உண்டு தன்னுடைய உடல் எடையை 20 கிலோ வரை குறைத்துள்ளார். இவ்வாறு உடல் எடையை குறைத்தும் இன்னும் சிலர் என்னை கேலி செய்வதாக நடிகை வித்யுலேகா கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் திரைக்குப் பின்னாலிருந்து கேலி செய்வதைவிட வேறு உங்களுக்கு என்ன தெரியும் என்று ஒரு கேள்வியும் எழுப்பியுள்ளார். இவ்வாறு வித்யூலேகா பேசியது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

vidhyuleka-1
vidhyuleka-1
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment