தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை வரலட்சுமி தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த வருகிறார். மேலும் சோலோ, கமர்ஷியல் என கலக்கி வரும் இவர் நான் கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என கூறாமல் எந்த கேரக்டர் கொடுத்தாலும் சமூகத்திற்கு நல்ல கருத்தை தருவதாக அமைந்தால் அதனை ஏற்று தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும் இதன் காரணமாக இவருக்கு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்து. வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து பல வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வரும் இவர் தற்பொழுது மீண்டும் தரமான கதையம்சம் உள்ள திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கி இருக்கிறது.
அதாவது தற்பொழுது நடிகை வரலட்சுமி ‘கொன்றால் பாவம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை கன்னட திரை உலகில் இரண்டு முறை மாநில விருதை பெற்ற இயக்குனர் தயால் பத்மநாபன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ பிரதாப் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படம் 1981-ல் நடக்கக்கூடிய திரைப்படமாக அமைந்து இருக்கிறது இந்த திரைப்படம் மோகன் ஹப்பு எழுதிய பிரபல கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனைத் தொடர்ந்து ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்பிரமணியம் சிவா, இம்ரான், சென்ராயன், சீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி ஆகியோர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இவ்வாறு கிரைம் திருவிழா படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் பிரதாப் கிருஷ்ணா மற்றும் மனோஜ் குமார் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்திற்கு சாங் சி.எஸ் இசையமைக்கிறார். இந்நிலையில் தற்பொழுது ‘கொன்றால் பாவம்’ படத்தின் பூஜையின் இன்று காலை சென்னையில் நடைபெற்ற நிலையில் சினிமா துறையை சார்ந்த பல பிரபலங்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 1ஆம் தேதி முதல் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.