படவாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வா என்று அழைத்தார்கள்.! வரலட்சுமி பகீர் பேட்டி அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

நடிகை வரலட்சுமி சரத்குமார் முதல் மனைவி சாயாவிற்கு பிறந்தவர். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக சிம்பு நடித்து வெளியாகிய போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் ஹீரோயினாக மட்டும் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் சண்டக்கோழி 2, சர்க்கார், நீயா 2, மாரி 2, என தொடர்ந்து ரிலீஸ் ஆகி வந்த நிலையில் தற்போது இவர் வெல்வெட் நகரம், காட்டேரி, சக்தி, டானி, சேசிங், பாம்பன் என இவருக்கு தற்போது படவாய்ப்புகளும் நீண்டு கொண்டே செல்கின்றன, பெண்களின் பாதுகாப்பிற்காக சக்தி என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியது தான் பலருக்கு அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது, ஏனென்றால் அந்த பேட்டியில் அவர் கூறியதாவது நான் வாரிசு நடிகையாக இருந்தாலும் தனக்கு சினிமா குடும்பத்தில் பின்புலன் இருந்தாலும் தன்னையும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தது பெரும் வேதனையாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் படங்களில் நடிக்க வாய்ப்பு வேண்டுமென்றால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களிடம் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என பலர் பேசியுள்ளார்கள் அவர்கள் யார் என்று ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. எனக்கு சினிமா வாய்ப்பே கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அப்படியான வாய்ப்புகளை ஏற்கவில்லை என கூறினார்.

மேலும் பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தயார் செய்து கொள்ள வேண்டும் என அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார், வரலட்சுமி சரத்குமார் இப்படி பேட்டியில் கூறியது கோலிவுட் சினிமாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கு முன் நடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்பு தருவதாக கூறி பலர் என்னிடம் படுக்கையை பகிர்ந்து கொண்டார்கள் ஆனால் பட வாய்ப்பு தரவில்லை என நிர்வாண போராட்டம் நடத்தினார், அதுமட்டுமில்லாமல் தன்னை யார் யார் படுக்க அழைத்தார்கள் என்ற ஆதாரத்தையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அந்த வகையில் தற்பொழுது வரலட்சுமி சரத்குமாரும் இதேபோல் கூறியுள்ளார், சினிமாவில் வாரிசு நடிகையாக இருந்தும் இவருக்கு ஏன் இந்த நிலைமை என்றால், சினிமா பின்புலம் இல்லாத நடிக்க வரும் நடிகைகளுக்கு என்ன நிலைமை என்று நினைத்துப் பாருங்கள்.

சினிமாவே ஒரு கலை நயத்துடன் பார்க்க வேண்டும் ஆனால் சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வேறு ஒரு நோக்கத்துடன் பார்க்கிறார்கள், அவர்களை கண்டுபிடித்து சினிமாவிலிருந்து காலை எடுக்க வேண்டும் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.

Leave a Comment