ஐயோ அந்த இடத்தில் நான் இருக்கக் கூடாதா..? ரசிகர்களை ஏங்க வைத்த வரலட்சுமி சரத்குமார்..!

actress varalakshmi sarathkumar latest cute photos: தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை வரலட்சுமி. இவர் பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதியுமான சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவராவர்.

இவ்வாறு நடிகை வரலட்சுமி நடித்த முதல் திரைப்படமே மெஹாஹிட் கொடுத்ததன் காரணமாக அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகளை எளிதில் பெற ஆரம்பித்தார் அந்த வகையில் தாரை தப்பட்டை எனும் திரைப்படத்தில் தர லோக்கலாக நடித்து ரசிகர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார்

இதைத்தொடர்ந்து தற்போது கதாநாயகியாக இல்லாவிட்டாலும் வில்லி கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை என்ற வகையில் நடிக்க ஆரம்பித்த நடிகை வரலட்சுமி சமீபத்தில் சண்டக்கோழி திரைப்படத்தில் கூட படுமோசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

நடிகை வரலட்சுமி திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் நடுவராகவும் பணியாற்றி உள்ளார். இவ்வாறு பிரபலமாக இருந்தாலும் பல கிசுகிசுக்களை சந்தித்து தான் ஆக வேண்டும்.

அந்த வகையில் பிரபல நடிகர் விஷாலுடன் ஏற்பட்ட காதல் முறிவுக்கு பிறகு நடிகை வரலட்சுமி நடிப்பில் மிகத் தீவிரமாக இறங்கி விட்டார்.  பார்ப்பதற்கு ஆண்டி மாதிரி இருந்த நமது நடிகை சமீபத்தில் முருங்கைக்காய் போல முறுக்கேற்றி உள்ளார்.

இதை தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு வரும் நடிகை வரலட்சுமி தற்சமயம் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

ஏனெனில் இவர் வெளியிட்ட புகைப்படத்தில் ஒரு நாயுடன் நெருங்கி இருப்பதை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு தைரியம் என கலாய்த்தது மட்டுமல்லாமல் ஒரு சிலர் மிக கேவலமாகவும் கமெண்ட செய்துள்ளார்கள்.

varalakshmi
varalakshmi

Leave a Comment